யாழ்ப்பாணத்தில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (11) இரவு இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் நோக்கி பலாலி வீதி வழியாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் ஆலயத்திற்கு அருகில், வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது, மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த 62 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து தொடர்பில் உழவு இயந்திரத்தின் 27 வயதுடைய சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.