யாழ். வடமராட்சி கிழக்கு, அம்பன் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற சென்ற வடமராட்சி கிழக்கு, மாமுனை, செம்பியன்பற்றைச் சேர்ந்த 39 வயதான ஜே. நதீஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

விபத்துக்குள்ளான நபரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் டிப்பர் சாரதியை மருதங்கேணி பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply