மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமத்தில் சித்திரைப் புத்தாண்டு தினமான நேற்று அதிகாலை, காட்டு யானையின் தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று அதிகாலை ஒரு மணியளவில், வீட்டு முற்றத்தில் நண்பர்களுடன் புத்தாண்டைக் கொண்டாடி விளையாடிக் கொண்டிருந்த 31 வயதுடைய இராசதுரை சசிகரன் என்பவர், சத்தம் கேட்டு வீட்டு வாசலுக்கு வந்தபோது, எதிர்பாராதவிதமாக யானையின் தாக்குதலுக்கு உள்ளானார். இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

தாக்குதலில் படுகாயமடைந்த சசிகரனை, உறவினர்கள் உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். எனினும், சிகிச்சை பலனளிக்காமல் அதிகாலை அவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share.
Leave A Reply