தமிழ்-சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த போது 40 அடி உயரமான வழுக்கும் (கிறீஸ்) மரத்தில் இருந்து வழுக்கி விழுந்ததில் 16 வயதான சிறுவன் உயிரிழந்த சம்பவம், பிடிகல பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
பிடிகல பொலிஸ் பிரிவின் அமுகொட பகுதியில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை (17) நடைபெறவிருந்த புத்தாண்டு விழாவிற்காக ஒரு குழு வழுக்கும் மரத்தை தயார் செய்து கொண்டிருந்தபோது, ஒரு சிறுவன் வழுக்கும் மரத்தில் ஏறும்போது விழுந்து எல்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்துள்ளார்.
உயிரிழந்தவர் தெனியாவத்தை, அமுகொட பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆவார். சடலம் எல்பிட்டிய மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.