“அமெரிக்காவின் புளோரிடா மாகாண பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.துப்பாக்கிச்சூடு நடத்தியவர் 20 வயதான போனிக்ஸ் சின்கர் என்று கண்டறியப்பட்டுள்ளது. சம்பவத்தின் பின் அவரை போலீசார் சுட்டுப் பிடித்தினர்.
போனிக்ஸ் சின்கர் அதே பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மாணவர் ஆவார். உள்ளூர் துணை ஷெரீப் ஆன அவரது தந்தையின் துப்பாக்கியை கொண்டு அவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.
போலீஸ் சுட்டதில் காயமடைந்த போனிக்ஸ் சின்கர்க்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரால் சுடப்பட்டு காயமடைந்த 6 பேரும் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூடு குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், துப்பாக்கிக்கள் சுடுவதல்ல, மனிதர்கள் தான் சுடுகிறார்கள் என்று கூறினார். சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
As you process the devastating news that another tragic shooting took the lives of at least 1 person and left 5 in critical condition in Florida, remember the shooter didn’t act alone.
He was assisted by 225 House members, 53 Senators, 6 Supreme Court Justices, and the NRA. pic.twitter.com/JvI8n7HRrA
— CALL TO ACTIVISM (@CalltoActivism) April 17, 2025