“கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் இன்று காலமானதாக தகவல் வெளியாகி உள்ளது.போப் பிரான்சிஸ் இன்று (திங்கள்கிழமை) காலை காலமானார் என்று வாடிகன் கேமர்லெங்கோ கார்டினல், கெவின் ஃபெரெல் அறிவித்தார்.

“இன்று காலை 7:35 மணிக்கு, ரோம் பிஷப் பிரான்சிஸ், தந்தையின் வீட்டிற்குத் திரும்பினார். அவரது முழு வாழ்க்கையும் இறைவனுக்கும் அவரது திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது” என்று கெவின் ஃபாரெல் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

88 வயதான போப், நிமோனியா, நுரையீரல் தொற்று, சுவாசக் கோளாறு காரணமாக பிப்ரவரி 14ஆம் தேதி மருத்துவமனைக்குச் சென்று, 38 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த மார்ச் 23 அன்று வாடிகனுக்கு திரும்பினார்.

நேற்று ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு வாடிகன் சதுக்கத்தில் கூடிய ஆயிரக்கணக்கான மக்களை நோக்கி புனித பேதுரு பேராலயத்தில் இருந்தவாறு போப் பிரான்சிஸ் கையசைத்து ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. “,

Share.
Leave A Reply