தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டம், தருமத்துப்பட்டி பன்றிமலை அமைதிச்சோலை அருகே கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி எரிந்த நிலையில் இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கன்னிவாடி பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கொல்லப்பட்ட இளம்பெண் மாரியம்மாள் (வயது 21) என்பவர் மதுரை ஆசிரமத்தில் வளர்ந்தவர் என்பதும், நத்தம் சாணார்பட்டியைச் சேர்ந்த பிரவீன் (வயது 23) என்பவரை காதலித்து வந்தது தெரியவந்தது.

ஏப்ரல் 12ஆம் திகதி, பிரவீன் மாரியம்மாளை மோட்டார் சைக்கிளில் அமைதிச்சோலை பகுதிக்கு அழைத்துச் சென்றது, அங்கு பொருத்தப்பட்டிருந்த CCTV காட்சிகளில் பதிவாகியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, பிரவீனிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில், தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தியதால், மாரியம்மாளை அமைதிச்சோலை பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்து, பின்னர் பெற்றோல் ஊற்றி எரித்ததாக வாக்குமூலம் அளித்தார்.

இதனையடுத்து, பிரவீனை பொலிஸார் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Share.
Leave A Reply