பூக்களை ரசிக்காதவர்கள் இந்த உலகில் யாரும் இருக்க மாட்டார்கள். பூக்களின் வடிவம், நிறம், மணம் போன்றவை அப்படியே கவர்ந்து இழுத்துவிடும். ஆனால், ஈக்வடார், கொலம்பியா, பெரு மேகக் காடுகளில் பூக்கும் ஒருவித வித்தியாசமான பூக்கள் குரங்கின் முகத்தைப் போலவே காணப்படுகிறது.
ட்ராகுலா சிமியா என அழைக்கப்படும் பூச்செடியில் பூக்கும் பூக்களின் நீண்ட வளைந்த இதழ்கள், உதடுகளின் அமைப்பு குரங்கின் முகத்தைப் போன்று காட்சியளிக்கிறது.
இந்த ட்ராகுலா சிமியா இனம் சுமார் 100 இற்கும் அதிகமான இனங்களைக் கொண்டுள்ளது.
இந்தப் பூக்கள் சிட்ரஸ் மணத்தைக் கொண்டுள்ளது. அத்துடன் கனிந்த ஒரேஞ்ச் பழத்தின் வாசனையையும் இது கொண்டுள்ளது.
இவை நச்சுத்தன்மையற்றவை. குளிர்ந்த, ஈரப்பதமான நிலையில் செழித்து வளரும்.
இந்தப் பூக்களை ஒவ்வொரு தடவை பார்க்கும்பொழுதும் உண்மையில் இது பூக்கள்தானா? அல்லது குரங்குகளாக என்ற சந்தேகம் மனதுக்குள் தோன்றினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.