தமிழ் மக்கள் விடு­தலைப் புலிகள் கட்­சியின் தலை­வரும் முன்னாள் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான பிள்­ளையான் என அழைக்­கப்­படும் சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்­தனின் கைது பெரும் சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தின் முன்னாள் உப­வேந்தர் பேரா­சி­ரியர் சிவ­சுப்­பி­ர­ம­ணியம் ரவீந்­தி­ரநாத் கடத்­தப்­பட்டு காணா­மல்­போகச் செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்­பி­லான விசா­ர­ணைக்­காக பிள்­ளையான் கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸ் தரப்பில் உட­ன­டி­யாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

பின்னர் உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­த­லுடன் பிள்­ளை­யா­னுக்கு தொடர்பு இருப்­பது விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­தாக பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சர் ஆனந்த விஜ­ய­பால பாரா­ளு­மன்­றத்தில் அறி­வித்­தி­ருந்தார்.

இந்த நிலையில் 90 நாட்கள் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தடுப்­புக்­காவல் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்டு பிள்­ளை­யா­னிடம் விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. இந்த நிலையில், பிள்­ளை­யா­னின் சட்­டத்­த­ர­ணி­யாக பிவி­துரு ஹெல உறு­ம­யவின் தலைவர் உதய கம்­மன்­பில பிள்­ளை­யானைச் சந்­தித்து 30 நிமி­டங்கள் வரையில் உரை­யா­டி­யி­ருந்தார்.

இந்தச் சந்­திப்­பை­ய­டுத்து உயிர்த்த ஞாயிறு தின தாக்­குதல் சம்­ப­வத்­துடன் பிள்­ளை­யானை தொடர்­பு­ப­டுத்த முயற்­சிக்­கப்­ப­டு­வ­தாக உதயகம்­மன்­பில குற்றம் சாட்­டி­யி­ருந்தார்.

விடு­தலைப்புலி­களை அழிப்­ப­தற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கிய தனக்கு இந்த நிலை ஏற்­பட்டு விட்­டதே என்று பிள்­ளையான் கண்­ணீர்­மல்க தன்­னிடம் தெரி­வித்­த­தா­கவும் அவர் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

இத்­த­கைய வெளிப்­ப­டுத்­த­லா­னது பிள்­ளையான் கைது தொடர்பில் கடும் சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

இந்த நிலையில் முன்னாள் ஜனா­தி­ப­தியும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வ­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிள்­ளை­யா­னுடன் தொலை­பே­சியில் உரை­யா­டு­வ­தற்கு முயன்­ற­தா­கவும் அதற்கு தாம் அனு­மதி அளிக்­க­வில்லை என்றும் அர­சாங்கத் தரப்பில் தெரி­விக்­கப்­பட்­டது. பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த விட­யத்தை தெரி­வித்­தி­ருந்­தமை பல்­வேறு சர்ச்­சை­களை உரு­வாக்­கி­யி­ருந்­தது.

முன்னாள் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஏன் பிள்­ளை­யா­னுடன் தொலை­பே­சியில் உரை­யாட முயன்றார்? அதற்­கான காரணம் என்ன? என்­றெல்லாம் கேள்வி எழுப்­பப்­பட்­டது.

ஆனாலும் முன்னாள் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிள்­ளை­யா­னுடன் உரை­யாட முற்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­படும் கருத்து தவ­றா­னது என்று ஐக்­கிய தேசியக் கட்சி தரப்பில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

பிள்­ளை­யானின் கைதுக்­கான காரணம் என்ன? என்­பது குறித்தும் அதன் பின்­னணி தொடர்­பிலும் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவின் பணிப்­பா­ள­ரிடம் கேட்­ட­றி­யு­மாறு தனது பாது­காப்பு அதி­கா­ரி­யிடம் முன்னாள் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க கோரி­யி­ருந்தார்.

இதற்­கி­ணங்­கவே ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் பாது­காப்பு அதி­கா­ரிகள் சி.ஐ.டி. பணிப்­பா­ள­ரிடம் கலந்­து­ரை­யா­டினர். ஆனால், இந்த விட­யத்தை அர­சாங்கம் கதையை மாற்றி கூறி விட்­டது என்று ஐக்­கிய தேசியக் கட்சி தரப்பில் விளக்கம் அளிக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த 17ஆம் திகதி ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழு உறுப்­பி­னர்கள் மற்றும் முக்­கி­யஸ்­தர்­க­ளுக்கு தேநீர் விருந்­து­ப­சாரம் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறிகொத்­தாவில் இடம்­பெற்­றுள்­ளது. இதன்­போதே ஐக்­கிய தேசியக் கட்­சியின் செய­லாளர் தலதா அத்­து­கோ­ரள, தவி­சாளர் வஜிர அபே­வர்­தன ஆகியோர் இந்த விட­யத்தை சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றனர்.

‘பிள்­ளை­யானைக் கைது செய்­துள்ள அர­சாங்கம் தற்­போது உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­த­லுடன் பிள்­ளை­யானை தொடர்­பு ­ப­டுத்­து­வதா இல்­லையா என்ற விட­யத்தில் தடு­மாறி வரு­வ­தா­கவே தெரி­கின்­றது.

ஆரம்­பத்தில் உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­த­லுடன் தொடர்பு என்று பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறி­யி­ருந்தார். தற்­போது உப­வேந்தர் ரவீந்­தி­ரநாத் கடத்தல் தொடர்­பி­லேயே பிள்­ளையான் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக அமைச்சர் பிமல் ரத்­நா­யக்க கருத்து தெரி­வித்­தி­ருக்­கின்றார். இதி­லி­ருந்து அர­சாங்கம் தடு­மா­று­வது தெரி­கின்­றது’ என்று எதி­ர­ணி­யினர் குற்றம் சாட்­டு­கின்­றனர்.

அதி­ருப்­தியில் சீனா

அர­சாங்­கத்­திற்குள் கொள்கை ரீதி­யாக ஏற்­பட்­டுள்ள மாற்­றங்­க­ளினால் உள்­வீட்டு கருத்து முரண்­பா­டுகள் நாளுக்கு நாள் தீவி­ர­ம­டைந்து வரு­கின்­றன.

தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடு­தலை முன்­னணி இந்த இரண்­டுக்கும் இடை­யி­லான முறுகல் நிலை குறித்து ஆரம்­பத்­தி­லி­ருந்தே தக­வல்கள் வெளி­யா­கின. பிர­தமர் மோடியின் விஜ­யத்தின் பின்னர் அர­சாங்­கத்­திற்குள் இந்த கொள்கை ரீதி­யான மோதல்கள் சற்று தீவி­ர­ம­டைந்து வரு­வ­தாக கூறப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை சீனா­வுக்கும் அர­சாங்­கத்­திற்கும் இடையில் மனக்­க­சப்­புகள் ஏற்­பட்­டுள்­ள­தாக அர­சியல் வட்­டா­ரங்­களில் பேசப்­ப­டு­கின்­றது.

ஒப்­பந்த பணம் செலுத்­தாமை, இந்­திய – இலங்கை பாது­காப்பு ஒப்­பந்தம் போன்ற விட­யங்­களை முன்­னி­லைப்­ப­டுத்­தியே இந்த நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. ஒரு கட்­டத்தில் ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்­கவை சீன தூதுவர் சந்­தித்து இந்த விட­யங்கள் குறித்து கலந்­து­ரை­யா­டி­யுள்ளார்.

ஜே.வி.பி.யின் கொள்­கையில் குழப்பம்

இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடியின் இலங்கை விஜ­யத்தின் போது பர­வ­லாக அனைத்து விட­யங்­களும் ஊட­கங்­ளுக்கு தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

ஆனால், பிர­தமர் மோடியின் வரு­கை­யுடன் அர­சாங்­கத்­திற்குள் சில மாற்­றகள் ஏற்­பட்­டுள்­ளதை உணர முடி­கி­றது. அதா­வது, அர­சாங்­கத்­திற்குள் ஏற்­பட்­டுள்ள கருத்து முரண்­பா­டு­களே இதற்கு பிர­தான கார­ண­மாக அமைந்­துள்­ள­னவாம். இதற்கு முன்­னரும் மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்கும் தேசிய மக்கள் சக்­திக்கும் இடை­யி­லான கருத்து முரண்­பா­டுகள் தொடர்பில் குறிப்­பிட்­டி­ருந்தோம்.

தேசிய மக்கள் சக்­தி­யாக கூட்­ட­ணி­ய­மைத்த பின்னர் இது­வரை காலமும் பாது­காத்து வந்த இட­து­சாரி கொள்­கை­களில் இருந்து மக்கள் விடு­தலை முன்­னணி (ஜே.வி.பி) மெது­வாக வில­கி­யுள்­ள­மையை காண முடி­கி­றது.

இருப்­பினும் ஜே.வி.பியின் அடுத்த தலை­வ­ராக எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற அமைச்சர் பிமல் ரத்­நா­யக்க ஜே.வி.பி. கொள்­கை­களை தொடர்ந்தும் பாது­காக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் இருந்து செயல்­பட்டு வரு­கின்றார்.

இத­ன­டிப்­ப­டையில் இந்­தியா குறித்து அமைச்சர் பிமல் ரத்­நா­யக்­கவின் நிலைப்­பாடு முந்­தைய ஜே.வி.பி.யின் கொள்­கை­யுடன் ஒத்­தி­சை­வாக இருப்­பதை அண்­மைய யாழ். விஜ­யத்தின் போது அவர் தெரி­வித்த கருத்­துக்­களில் இருந்து வெளிப்­பட்­டி­ருந்­தது. அதே­போன்று தான் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி இலங்­கையில் இருந்த சந்­தர்ப்­பங்­களில் அமைச்சர் பிமல் ரத்­நா­யக்க உட்­பட குறிப்­பிட்ட சிலர் இந்­திய தரப்­பு­க­ளு­ட­னான சந்­திப்­பு­களில் பங்­கேற்­றி­ருக்­க­வில்லை.

சீன தூதுவர் – ஜனா­தி­பதி சந்­திப்பு

இவ்­வா­றா­ன­தொரு நிலையில் பிர­தமர் நரேந்­திர மோடியின் இலங்கை விஜ­யத்­திற்கு முன்­ப­தாக ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்­க­வுக்கும் சீன தூதுவர் கீ சென்ஹொங் ஆகி­யோ­ருக்கு இடையில் கலந்­து­ரை­யாடல் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது.

இதன் போது இரு­நாட்டு உற­வுகள் மற்றும் உத்­தேச புரிந்­து­ணர்வு ஒப்­பந்த திட்­டங்கள் குறித்து கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது. சீன நிறு­வ­னங்­க­ளினால் இலங்­கையில் ஏற்­க­னவே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற திட்­டங்­க­ளுக்­கான ஒப்­பந்த கொடுப்­ப­ன­வுகள் நாட்டில் ஏற்­பட்ட பொரு­ளா­தார நெருக்­கடி கார­ண­மாக செலுத்­தப்­ப­டாமல் இருந்­துள்­ளன.

கடந்த ஆட்­சியின் போது குறிப்­பிட்ட தொகை நிதி பகு­தி­ய­ளவில் குறித்த சீன நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டது. இருப்­பினும் ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்­கவின் அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த பின்னர் அந்த கொடுப்­ப­ன­வுகள் நிறுத்­தப்­பட்­டுள்­ளன. இதனால் திட்­டங்­களை முன்­னெ­டுப்­பதில் நெருக்­க­டிகள் ஏற்­பட்­டுள்­ளன. இந்த விட­யத்தை சுட்­டிக்­காட்டி கொடுப்­ப­ன­வு­களை செலுத்­து­மாறு அர­சாங்­கத்­திடம் சீன தரப்பு கோரிக்கை விடுத்­துள்­ளது.

ஆனால், குறித்த திட்­டங்கள் ஊடாக உள்­நாட்டில் சிலர் பெரும் ஊழல் மோச­டி­களில் ஈடு­பட்­டுள்­ளனர். எனவே அது குறித்து தற்­போது விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இந்த மோச­டிகள் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­ற­மை­யினால் இந்த சந்­தர்ப்­பத்தில் நிதி வழங்­கு­வது கடினம் என அர­சாங்கம் சீனத் தரப்­புக்கு பதி­ல­ளித்­துள்­ள­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. இதனை சற்றும் எதிர்­பார்க்­காத சீனா, நிதி வழங்­கப்­படாவிடின், உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள புதிய முத­லீட்டு திட்­டங்­களை முன்­னெ­டுப்­பதில் நெருக்­க­டி­யான நிலைமை ஏற்­ப­டலாம் என தெரி­வித்­துள்­ளது.

சீனாவின் கடும் அதி­ருப்தி

இவ்­வாறு அர­சாங்­கத்தின் தீர்­மா­னங்கள் குறித்து சீனா அதி­ருப்­தியில் உள்ள நிலையில், இந்­தி­யா­வுடன் இலங்கை மேற்­கொண்­டுள்ள பாது­காப்பு ஒப்­பந்தம், ஆய்­வுக்­கப்­பல்­களின் வரு­கைக்கு பாத­க­மாக அமை­யுமா என்­பது குறித்தும் சீனா அவ­தானம் செலுத்­தி­யுள்­ளது.

ஏனெனில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க விதித்­தி­ருந்த தடை காலா­வ­தி­யா­கி­யுள்ள நிலையில், ஆய்­வுக்­கப்­ப­லுக்­கான அனு­மதி குறித்து இலங்கை எவ்­வி­த­மான தீர்­மா­னத்­தையும் அறி­விக்­க­வில்லை.

அதே­போன்று இந்­தியா தனது தேசிய பாது­காப்பை காரணம் காட்டி தொடர்ந்தும் சீன ஆய்­வுக்­கப்­பல்­களின் வரு­கையை எதிர்த்தால் தற்­போ­தைய அர­சாங்கம் எத்­த­கைய நட­வ­டிக்­கையை எடுக்கும் என்ற அச்­சம் பெய்ஜிங்­கிற்கு உள்­ளது.

ஆரம்­பத்­தி­லி­ருந்து ஒரு நம்­ப­கர­மான நிலைமை ஜனா­தி­பதி அநு­ரவின் அர­சாங்கம் மீது சீனா­வுக்கு உள்­ளதா என்றால் அது சந்­தேகம் தான். எனவே சீன ஆய்­வுக்­கப்பல் விவ­காரம் அர­சாங்­கத்­திற்கு தலை­யி­டி­யா­கவே இருக்கும்.

சஜித்­துக்கு நன்றி கூறிய ஜனா­தி­பதி

ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க, இந்­திய பிர­தமர் நரேந்தி மோடிக்கு இராப்­போ­சன விருந்­தினை வழங்­கி­யி­ருந்தார். எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கும் இந்த விருந்­து­ப­சார நிகழ்வில் பங்­கேற்­ப­தற்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

இத­ன­டிப்­ப­டையில் பிர­தமர் மோடிக்­காக வழங்­கப்­பட்ட விருந்­து­ப­சா­ரத்தில் சஜித் பிரே­ம­தா­சவும் பங்­கேற்­றி­ருந்தார். ஆனால் சஜித் பிரே­ம­தா­சவின் புகைப்­ப­டங்கள் எத­னையும் வெளி­யி­டாமல் இருக்க அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

இருப்­பினும் நிகழ்வின் இறுதி வரை ஜனா­தி­பதி மாளி­கையில் எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச இருந்­துள்ளார். இறு­தியில் ஜனா­தி­பதி மற்றும் வெளி­வி­வ­கார அமைச்சர் விஜித்த ஹேரத் ஆகியோர் சஜித் பிரே­ம­தா­ச­வுடன் சம்­பா­ஷ­ணையில் ஈடுபட்­டுள்­ளனர்.

இலங்­கைக்கு தொடர்ந்தும் ஒத்­து­ழைப்பு வழங்குமாறும், ஆடை உற்பத்தி தொழிற்­து­றையில் ஏற்­படக்கூடிய நெருக்­க­டி­களின் போது ஏற்­று­மதி அளவை அதி­க­ரித்து ஒத்­து­ழைக்­கு­மாறும் பிர­தமர் மோடி­யிடம் தான் கேட்­டுக்­கொண்­ட­தாக ஜனா­தி­ப­தி­யிடம் சஜித் இதன் போது குறிப்­பிட்டார். இதற்கு ஜனா­தி­பதி நன்றி தெரி­வித்­துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல்

நாளை திங்­கட்­கி­ழமை 21 ஆம் திக­தி­யுடன் உயிர்த்த ஞாயிறு தின தாக்­குதல் இடம்­பெற்று 6 ஆண்­டுகள் ஆகின்­றன. இதனை மையப்­ப­டுத்தி பேராயர் இல்லம் விசேட ஏற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

கொழும்பு – கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் திருத்­த­லத்தை நோக்கி பாத யாத்­திரை மற்றும் விசேட ஆரா­த­னைகள் இடம்­பெ­ற­வுள்­ளன. கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­ட­கையின் விசேட அறி­விப்பு ஒன்றும் இடம்­பெ­ற­வுள்­ளது.

அதே போன்று அன்­றைய தினம் பிற்­பகல் 4 மணிக்கு கட்­டு­வாப்­பிட்டி தேவா­ல­யத்­திற்கு முன்­ப­தாக ஆர்ப்­பாட்டம் ஒன்றும் இடம்­பெ­ற­வுள்­ளது.

இதே­வேளை, உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டைய முக்­கிய சூத்­தி­ர­தா­ரி­களை அறி­விக்க ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க தயா­ராகி வரு­வ­தாக அர­சாங்க தக­வல்கள் குறிப்­பி­டு­கின்­றன.

ஏனெனில் ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தின தாக்­குதல் சூத்­தி­ர­தா­ரி­கள் குறித்த தகவல்களை வெளி­யி­டு­வ­தாக அர­சாங்கம் உறு­தி­ய­ளித்­தி­ருந்­தது. ஆட்சி பீடம் ஏறி 6 மாதங்கள் கடந்தும் அர­சாங்­கத்தின் மௌனம் பேராயர் இல்­லத்தின் விமர்­ச­னத்­திற்கு கார­ண­மா­கி­யுள்­ளது. அத்­துடன் மே மாதம் 6 ஆம் திகதி உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் இடம்­பெ­ற­வுள்ள நிலையில் அர­சாங்­கத்தின் வெளிப்படுத்தல் குறித்து அனைத்து தரப்புகளும் அவதானத்துடன் உள்ளன.

தேர்தல் ஆணைக்குழுவின் எச்சரிக்கை கடிதம்

தேர்தல் சட்டங்களை மீறும் அரசியல் அறிக்கைகள் வெளியிடப்படுவதை தவிர்க்கு மாறு, இலங்கை தேர்தல் ஆணைக்குழு, ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம் அனுப்­ப­வுள்­ள­து.

அதிகாரம் இல்லாத உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி வழங்கப் படமாட்டாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசியல் மேடைகளில் தெரிவித்திருப்பது, தேர்தல் சட்டங்களை திட்டவட்டமாக மீறுவதாகவே கண்காணிப்பு அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.

குறிப்பாக, உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தின் பிரிவு 82சீ (முறையற்ற செல்வாக்கு ஏற்படுத்துதல்) மற்றும் 82டீ (அதிகபட்ச நன்மை தரும் வாக்குறுதிகள் மற்றும் பரிசுகள்) ஆகியவை இதன்மூலம் தெளிவாக மீறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டுகின்றன.

ஜனாதிபதி ஒரு சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் அல்ல என்றும், நிதி ஒதுக்கீடு தொடர்பான முடிவுகளில் அவருக்கே இறுதியான அதிகாரம் இருப்பதால், இத்தகைய அறிக்கைகள் தேர்தலின் நியாயத்தையும் நாட்டின் நலன்களையும் பாதிக்கக்கூடியவை

என கண்காணிப்பு அமைப்புகள் எச்சரிக் கின்றன. இவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டு

ள்ளதால், இலங்கை அரசியலமைப்பின் 35 (1) பிரிவின் கீழ், ஜனாதிபதிக்கு எதிரான எந்தவொரு சிவில் அல்லது குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது. எனவே, தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிப்பை வழங்கவுள்­ள­மை குறிப்­பி­டத்­தக்­க­து.

கொழும்பு மாந­கர சபை விவ­கா­ரத்தில் ஐ.ம.ச.வுக்குள் அதி­ருப்தி

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் இடம்­பெ­ற­ வுள்ள நிலையில் பிர­சார நட­வ­டிக்­கைகள் தீவி­ர­ம­டைந்­துள்­ளன. இந்­நி­லையில் பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய மக்கள் சக்­திக்குள் பல்­வேறு முரண்­பா­டுகள் தலை­தூக்­கி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

கொழும்பு மாந­கர சபைத் தேர்தல் விவ­கா­ரத்தில் பல்­வேறு உள்­ளக முரண்­பா­டு­களை ஐக்­கிய மக்கள் சக்தி சந்­தித்து வரு­கின்­றது. கொழும்பு மாந­கர சபைக்­கான கட்­சியின் மேயர் வேட்­பாளர் தெரிவில் சில தரப்­பினர் அதி­ருப்தி கொண்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

கொழும்பு மாந­கர சபைக்­கான மேயர் வேட்­பா­ள­ராக முதலில் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எரான் விக்­ர­ம­ரட்­னவை நிய­மிப்­ப­தற்கு கட்­சியின் தலைமை திட்­ட­மிட்­டி­ருந்­தது. ஆனால், அந்த நிய­ம­னத்தை ஏற்­ப­தற்கு அவர் மறுப்பு தெரி­வித்து விட்டார்.

இந்­நி­லையில் மேயர் வேட்­பா­ள­ராக முன்னாள் மாகாண சபை உறுப்­பி­னரும் கொழும்பு வடக்கு அமைப்­பா­ள­ரு­மான சி.வை.பி. ராமை நிய­மிக்­கலாம் என்று சிலர் பரிந்­து­ரைத்­தி­ருந்­தனர். ஆனாலும் கட்சித் தலைமை அதற்­கான நட­வ­டிக்­கை­யினை எடுத்­தி­ருக்­க­வில்லை.

இந்தப் பின்­ன­ணி­யில்தான் மேயர் வேட்­பா­ள­ராக டாக்டர் ருபைஸ் ஹனி­பாவை நிய­மிப்­ப­தற்கு கட்சித் தலைமை தீர்­மா­னித்­தி­ருந்­தது. இந்த நிய­மனம் தொடர்பில் பல்­வேறு தரப்­பி­னரும் அதி­ருப்­தி­களை தெரி­வித்­தி­ருக்­கின்­றனர். இந்த அதி­ருப்தி நிலை­யா­னது தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­க­ளிலும் தாக்­கத்தை செலுத்­தி­யுள்­ள­தாக விட­ய­ம­றிந்த வட்­டா­ரங் கள் தெரி­விக்­கின்­றன.

வெறுப்­ப­டைந்­துள்ள தலதா

ஐக்­கிய தேசியக் கட்­சியின் செய­லா­ள­ராக பதவி வகித்து வரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தலதா அத்­து­கோ­ரள வெறுப்­ப­டைந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் ஒற்­று­மையைக் கட்­டி­யெ­ழுப்பி ஐக்­கிய மக்கள் சக்­தி­யு­டனும் ஒரு­மைப்­பாட்டை ஏற்­ப­டுத்தும் நோக்­குடன் கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்னர் ஐக்­கிய தேசியக் கட்­சியின் செய­லா­ள­ராக தலதா அத்­து­கோ­ரள பத­வி­யேற்­றி­ருந்தார்.

ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் தனக்கு பூரண ஒத்­து­ழைப்பு கிடைக்கும் என அவர் எதிர்­பார்த்­தி­ருந்தார். ஆனால், அத்­த­கைய ஒத்­து­ழைப்பு கிடைக்­கா­மையும் ஐக்­கிய மக்கள் சக்­தி­யி­ன­ருடன் ஒரு­மைப்­பாட்டை ஏற்­ப­டுத்தும் முயற்சி தோல்­வி­ய­டைந்­த­மையும் அவர் வெறுப்­ப­டைப்­ப­டைந்­துள்­ள­மைக்கு காரணம் என கூறப்­ப­டு­கி­றது.

தற்­போது உள்­ளூ­ராட்சித் தேர்தல் நடை­பெ­ற­வுள்ள நிலையில் அந்தத் தேர்­தலை சந்­திப்­ப­தற்கு கட்சி மட்­டத்தில் பூரண ஒத்­து­ழைப்­புக்கள் கிடைக்­க­வில்லை என்று அவர் கரு­து­வ­தாகத் தெரி­கின்­றது. இதன் கார­ண­மாக தேர்தல் முடி­வ­டைந்த பின்னர் உறு­தி­யான முடி­வு­வொன்றை எடுக்கும் எண்­ணத்தில் தலதா அத்­து­கோ­ரள இருப்­ப­தா­கவே தெரி­கின்­றது.

தலதா வழி­பாட்­டுக்கு அணி­தி­ரண்ட இரா­ஜ­தந்­தி­ரிகள்

16 வரு­டங்­க­ளுக்குப் பின்னர் ஸ்ரீ தலதா வழி­பாடு நேற்று முன்­தினம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. புனித தந்த தாதுவை தரி­சிப்­ப­தற்கு சந்­தர்ப்பம் அளிக்கும் வகையில் இந்த வழி­பாடு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்த ஆரம்ப நிகழ்வில் பங்­கேற்­ப­தற்­காக கொழும்­பி­லி­ருந்து விசேட ரயிலில் தூது­வர்கள் மற்றும் இராஜதந்திரிகள் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். இதில் பிரித்தானியா, கனடா, இந்தியா உட்பட ஐரோப்பிய நாடு களின் தூதுவர்களும் பங்கேற்றிருந்தனர்.

வெள்ளை ஆடைகள் அணிந்து தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் இந்த நிகழ்வில் பக்தி பூர்வமாக கலந்து கொண்டிருந்தனர். இவர்களுக்கான வசதிகளை வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply