சுவீடன் நாட்டில் வீதியில் சென்று கொண்டிருந்த மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

உப்சலா நகரத்தில் வக்சலா சதுக்கத்தின் அருகில் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.

இத்தாக்குதலில் பலர் படுகாயமடைந்த நிலையில் மூவர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட விசாரணையில் சந்தேகத்தின் பேரில் 16 வயது சிறுவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

சுவீடன் நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வரையறைகளின்படி அந்நாட்டில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அனைவரும் கட்டாயம் உரிமம் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த பெப்வரி மாதம் சுவீடனின் ஒரிப்ரோ நகரத்தின் கல்வி நிறுவனத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் கொல்லப்பட்டமை தெரிந்ததே.

Share.
Leave A Reply