கம்பஹா – வத்துராகம வீதியில் கினிகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்றுள்ளது.
தனியார் பஸ் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.