நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை, கெரண்டி எல்ல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் தனது ஒன்பது மாத குழந்தையுடன் பஸ்ஸின் இடிபாடுகளுக்கள் சிக்கியிருந்த தாய் பெரும் போராட்டத்துக்கு மத்தியில் காப்பாற்றியுள்ளார்.

குழந்தையை காப்பாற்றிய  45 வயதுடைய தாய் பின்னர்  உயிரிழந்துள்ள துயரம் சம்பவம் பதிவாகியுள்ளது.

கடுமையான காங்களுடன் பஸ்ஸிற்குள் சிக்கியிருந்த குறித்த தாய் மற்றும் அவரது குழந்தை பாதுகாப்பு பிரிவினர் கடும் பிரயத்தனத்துக்கு பின்னர் மீட்டுள்ளனர்.

இதனை அடுத்து தாயும் குழந்தையும் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 45 வயதுடைய தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும்,  9 மாதங்களேயான குழந்தை காப்பாற்றப்பட்டதுடன் குறித்த குழந்தை மேலதிக சிகிச்சைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மே மாதம் 11 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் அன்னையர் தினம் கொண்டப்பட்ட வேளையில் இந்த துயரச் சம்பவத்தின் புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

சமூக ஊடகங்களில் பேசுப்பொருளாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply