கனடா நாடாளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சி மீண்டும் வெற்றி பெற்றது.
புதிய பிரதமராக மார்க் கார்னி வெற்றி பெற்றார். அவரது அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்று கொண்ட தமிழ் வம்சாவளி பெண்ணான அனிதா ஆனந்த் பகவத் கீதையை வைத்து பதவி பிரமாணம் எடுத்து கொண்டார்.
இந்த அனிதா ஆனந்த் யார்? பின்னணி என்ன? . கனடா பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ இருந்தார்.
அரசியல் நெருக்கடியால் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இடைக்கால பிரதமராக மார்க் கார்னி செயல்பட்டார்.
அதன்பிறகு அவரே லிபரல் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த மாதம் இறுதியில் கனடாவில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் லிபரல் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து மீண்டும் மார்க் கார்னி பிரதமராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில் தான் புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டது. மொத்தம் 28 அமைச்சர்கள்,10 மத்திய இணை அமைச்சர்கள் என்று மொத்தம் 38 பேர் இடம் பெற்றனர்.
இதில் 24 பேர் புது முகங்களாகும். இந்த அமைச்சரவையில் தமிழக வம்சாவளியை சேர்ந்த ஆனந்த் இடம்பெற்றுள்ளார். அவருக்கு வெளியுறவுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து அனிதா ஆனந்த் பகவத்கீதையை வைத்து அமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொண்டார்.
பகவத் கீதையை வைத்து அனிதா ஆனந்த் பதவியேற்ற வீடியோவை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் ‛ கனடாவின் புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து பெருமிதம் கொள்கிள்றேன்,பாதுகாப்பான நியாயமான உலகத்தை கட்டியெழுப்பவும் இகனேடிய மக்களிற்கு வழங்கவும் பிரதமர் மார்க் கார்னி மற்றும் எங்கள் குழுவினருடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளேன் என அவர் சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.
தற்போது கனடா வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அனிதா ஆனந்த் பெற்றோர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள். தந்தை தமிழகத்தை சேர்ந்தவர்.மருத்துவர்.. தாய் பெயர் சரோஜ். இவர் பஞ்சாப்பை சேர்ந்தவர். இவரும்மருத்துவர் டாக்டர்
Je suis honorée d’avoir été nommée ministre des Affaires étrangères du Canada. J’ai hâte de travailler avec le premier ministre Mark Carney et notre équipe pour bâtir un monde plus juste et plus sécuritaire, et livrer des résultats pour les Canadiennes et les Canadiens. pic.twitter.com/npPPuVkkpT
— Anita Anand (@AnitaAnandMP) May 13, 2025
அனிதா ஆனந்த் கனடாவிலேயே பிறந்து வளர்ந்தவர். இப்போது 58 வயது ஆகிறது. 4 பட்டப்படிப்புகளை முடித்துள்ளார்.
குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் இளநிலை பிரிவில் Arts in Political Studies என்பதை படித்து முடித்தார். அதில் தங்கப்பதக்கம் வாங்கினார். அதன்பிறகு ஒக்ஸ்போர்ட்ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இளநிலை பிரிவில்Jurisprudenceபடிப்பையும் தல்ஹசி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பையும் டொரண்டோ பல்கலைகழகத்தில் சட்ட மேற்படிப்பையும் முடித்தார்.
அனிதா ஆனந்த் அடிப்படையில் வழக்கறிஞர் ஆவார் . இவர் கடந்த 2015ம் ஆண்டில் பொது வாழ்க்கைக்குள் நுழைந்தார்.
அவர் ஒன்டாரியோ அரசின் நிபுணர் குழுவில் இடம்பிடித்தார். அதன்பிறகு கடந்த 2019ம் ஆண்டில் ஒக்வில்லி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதன்பிறகு கொரோனா பரவல் சமயத்தில் பொதுசேவை மற்றும் கொள்முதல் பிரிவின் அமைச்சராக செயல்பட்டார். அனிதா ஆனந்துக்கு திருமணமாகி விட்டது. கணவர் பெயர் ஜான் நோல்டன். இவரும் கனடாவில் வழக்கறிஞராகவும் வருகிறார்.