“தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 28-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு நடைபெற்றது.

இத்தேர்வை சுமார் 9 லட்சம் பேர் எழுதி இருந்தனர். இதனைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் மே-19-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்னதாக இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, இன்று 2024-25ஆம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.

இதில் 93.80 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். வழக்கம்போல 10-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 91.74%, மாணவிகள் 95.88 தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் 92.32 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. ஒட்டன்சத்திரம் கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர் மனீஸ்குமார் 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் சாதனை படைத்துள்ளார்.

இவர் ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் தலா 100 மதிப்பெண்களும், தமிழ் பாடத்தில் 98 மதிப்பெண்களும் எடுத்துள்ளார். சாதனை படைத்த மாணவருக்கு ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

பல்வேறு மாணவ-மாணவிகள் சாதனைகள் படைத்துள்ள நிலையில் மதுரையைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண் பெற்று சாதனைப் படைத்துள்ளளன.

அரசு உதவிப் பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாயஸ்ரீ மற்றும் மகாஸ்ரீ ஆகிய இரட்டை சகோதரிகள் 475 மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.

ஆங்கிலத்தை தவிர மற்ற பாடங்களில் வெவ்வேறு மதிப்பெண்கள் பெற்றபோதிலும், இருவரும் ஒட்டுமொத்த மதிப்பெண்ணாக 475 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மாயஸ்ரீ தமிழ்- 96, ஆங்கிலம்- 96, கணக்கு- 95, அறிவியல்- 95, சமூக அறிவியல்-93மகாஸ்ரீ தமிழ்- 98, ஆங்கிலம்- 96, கணக்கு- 92, அறிவியல்- 94, சமூக அறிவியல்-95”,

Share.
Leave A Reply