“ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சென்ற ஹெலிகாப்டரை குறிவைத்து உக்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியது.

இருப்பினும், புதின் தாக்குதலில் இருந்து மயிரிழையில் தப்பியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.நேற்று நள்ளிரவுக்குப் பிறகு புதின் பதற்றமான எல்லைப் பகுதியான குர்ஸ்க்கிற்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

ஏப்ரல் மாதம் ரஷியா உக்ரேனியப் படைகளை குர்ஸ்க் பகுதியிலிருந்து விரட்டியடித்ததாக அறிவித்த பிறகு, புதின் குர்ஸ்க் பகுதிக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.

புதினின் ஹெலிகாப்டர் பாதையில் உக்ரைனால் ஏவப்பட்ட ஒரு ஆளில்லா விமானம், ரஷிய வான் பாதுகாப்பு அமைப்பால் இடைமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிபர் ஹெலிகாப்ட்டர் தொடரணி வானில் பறந்து கொண்டிருக்கும்போதே அதைத் தாக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ரஷிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்து ரஷிய பாதுகாப்பு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. “,

Share.
Leave A Reply