– இலங்கைக்கு கிடைத்த வரலாற்று வெற்றி
இந்தியாவின் தெலுங்கானாவில் நடைபெறும் 72ஆவது உலக அழகி போட்டியில் ‘Multimedia Challenge’பிரிவில் 20 இறுதிப் போட்டியாளர்களில் இலங்கையைச் சேர்ந்த அனுதி குணசேகர தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இதில் 2ஆவது இடத்தினை பெற்றுக் கொண்டார்.
இது இலங்கைக்கு கிடைத்த வரலாற்று வெற்றியாகும்.
சர்வதேசத்தின் முன்னிலையில் பெண்களுக்காக குரல் கொடுத்த உலக அழகி போட்டியாளரான அனுதி குணசேகர 40 இறுதிப் போட்டியாளர்களில் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான கடைசி வாய்ப்பாக Multimedia Challenge அமைந்திருந்தது.
Multimedia Challenge இன் இறுதி சவாலுக்காக அவர் உருவாக்கிய வீடியோவை மிஸ் வேர்ல்ட் செயலிக்கு சமர்ப்பித்திருந்தார்.
அதில் ஆசியா மற்றும் ஓசியானியா பிராந்தியத்தில் ‘Multimedia Challenge’ பிரிவில் 5 இறுதிப் போட்டியாளர்களாக நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, Miss World 2025 இறுதிப் போட்டிகள் மே மாதம் 31ஆம் திகதி ஹைதராபாத் சர்வதேச கண்காட்சி மண்டபத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.