உக்ரைனின் நகரங்கள் மீது உக்கிர தாக்குதல்களை மேற்கொள்வதற்கு ரஸ்ய படையினர் வடகொரியாவின் ஆயுதங்களை பயன்படுத்துகின்றனர் என ஐநா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா பிரிட்டன் உட்பட 11 நாடுகள் இடம்பெற்றுள்ள தடைகள் குறித்த ஐநா குழு தனது அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 2023ற்க்கு பின்னர் வடகொரியா ரஸ்யாவிற்கு 20000 கொள்களன் வெடிமருந்துகளை வழங்கியுள்ளது என தடைகள் குறித்த ஐநா குழு தெரிவித்துள்ளது.
ஆட்டிலறிகள் ஆர்ஜிபிக்களுக்கான 9 மில்லியன் வெடிபொருட்களை வடகொரியா ரஸ்யாவிற்கு வழங்கியுள்ளது என தெரிவித்துள்ள இந்த குழுவினர் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை மீறி ரஸ்யாவும் வடகொரியாவும் தங்களின் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் ஆழமாக்கவுள்ளன என தெரிவித்துள்ளது.
உக்ரைன் நகரங்கள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான ரஸ்யாவின் வலுவை அதிகரிப்பதற்கு வடகொரியா உதவியுள்ளது உக்ரைனின் உள்கட்டமைப்புகள் மீது ரஸ்யா தாக்குதலை மேற்கொள்வதற்கான வலுவை வடகொரியா அதிகரித்துள்ளது என ஐநா குழு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 2023 இல் ரஸ்யாவிற்கு வெடிபொருட்களை அனுப்ப ஆரம்பித்தது முதல் வடகொரியா 100 கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணைகளை அனுப்பியுள்ளது என இந்த ஐநா குழு தெரிவித்துள்ளது.
கடல்வழியாகவும் ஆகாயமாக்கமாகவும் புகையிரதத்தின் ஊடாகவும் வடகொரியா இந்த ஆயுதங்களை அனுப்புகின்றது என ஐநா குழுவினர் தெரிவித்துள்ளனர்.