முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்த பொங்கல் உட்சவத்திற்கு முன்னர் முதல் திங்கள்  பாக்குத் தெண்டல் இரண்டாவது திங்கள் உப்பு நீரில் விளக்கெரியும் அதிசயமான நிகழ்வுக்காக அம்மனுக்கு தீர்த்தம் எடுக்கும் நிகழ்வும் இறுதி மூன்றாவது திங்கள் வைகாசிப் பொங்கல் விழாவும் இடம்பெறும்.

இந்த சடங்கு முறையில் இரண்டாவது திங்கள் கிழமையான இன்றைய நாளில் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

காட்டு விநாயகர் ஆலயத்தில் இன்று மாலை  இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளை தொடர்ந்து தீர்த்தக்குடம் பாரம்பரிய வழிகள் ஊடாக முல்லைத்தீவு தீர்த்தக்கரைக்கு எடுத்து செல்லப்பட்டு முல்லைத்தீவு பெருங்கடலில்  தீர்த்தம் எடுக்கப்பட்டு மீண்டும் பாரம்பரிய வழிகள் ஊடாக காட்டுவிநாயகர் ஆலயத்தை சென்றடைந்து அங்கு உப்புநீரில் விளக்கெரியும் அற்புதம் இடம்பெறும்.

தொடர்ந்து எதிர்வரும் 08.06.2025 அன்று காட்டுவிநாயகர் ஆலய பொங்கல் இடம்பெற்று 09.06.2025 திங்கள் வைகாசி பொங்கல் விழா சிறப்பாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply