கர்நாடக மாநிலம் பெங்களூரு அனேகல் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 28). இவர் 26 வயது மனைவி மற்றும் கைக்குழந்தையும் ஹீலலிகே என்ற கிராமத்தில் வீடு வாடைக்கு எடுத்து வாழ்ந்து வந்தார்.

கடந்த 3ஆம் தேதி, சங்கர் தனது மனைவியிடம் நான் வேலைக்குச் செல்கிறேன். நாளை காலைதான் திரும்பி வருவேன் எனத் தெரிவித்து விட்டு வேலைக்குச் சென்றுள்ளார்.

வேலை விரைவாக முடிய, இரவே வீட்டிற்கு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்தபோது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

அவருடைய மனைவி மற்றொரு நபருடன் இருந்துள்ளார். இதைப் பார்த்த பயங்கர கோபம் அடைந்துள்ளார்.

மனைவியுடன் இது தொடர்பாக சண்டையிட்டுள்ளார். மனைவியும் இவருடன் சண்டையிட்டுள்ளார்.

பின்னர் வீட்டை விட்டு வெளியேறுவதாக மனைவி கூறியுள்ளார். வீட்டைவிட்டு வெளியேறிய மனைவி, அடிக்கடி வீட்டிற்கு வந்து சங்கருடன் தகராறு செய்துள்ளார்.

இதுபோன்றுதான் நேற்றும் சங்கர் வீட்டில் இருந்தபோது, அவரது மனைவி வந்து தகராறு செய்துள்ளார்.

இதனால் சங்கருக்கு கடுங்கோபம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்திற்குப் பிறகு மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார்.

அத்துடன் அவரது கோபம் தீரவில்லை. மனைவியின் கழுத்தை கூர்மையான ஆயுதத்தால் துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல், மனைவியின் தலையை அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு எடுத்துச் சென்று சரணடைந்துள்ளார்.

தனது மனைவியை தலை துண்டித்து கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். போலீசார் அவர் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.”,

Share.
Leave A Reply