நம்மில் பெரும்பாலானோருக்கு கச்சா எண்ணெய் அரபு நாடுகளில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது தெரியும்.
பெட்ரோல் டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெயை உலகில் அதிகம் உற்பத்தி செய்யும் நாடு குறித்த தகவல்கள் தற்போதைய அரசியல் சூழலில் கவனம் பெற்றுள்ளன.
இன்றைக்கு எலக்ட்ரானிக் ஸ்கூட்டர்கள், கார்கள் அதிகம் சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளன, இருப்பினும் கச்சா எண்ணெயின் தேவை மற்றும் அதிலிருந்து உருவாக்கப்படும் பெட்ரோல் டீசலின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதைத்தான் பார்க்க முடிகிறது.
இவை மட்டுமின்றி சமையலுக்கு பயன்படுத்தப்படும் மண்ணெண்ணெய் போன்ற பொருட்களும் கச்சா எண்ணெயில் இருந்து உருவாக்கப்படுகின்றன.
நம்மில் பெரும்பாலானோருக்கு கச்சா எண்ணெய் அரபு நாடுகளில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது தெரியும். 2023 ஆம் ஆண்டு தகவலின் அடிப்படையில் அமெரிக்கா தான் உலகிலேயே கச்சா எண்ணெயை அதிகம் உற்பத்தி செய்த நாடாக பதிவாகியுள்ளது.
இங்கு மட்டும் நாள் ஒன்றுக்கு 2 கோடியே 19 லட்சம் பேரல்கள் அளவுக்கு கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக சவுதி அரேபியா நாள் ஒன்றுக்கு 1 கோடியே 11 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்துள்ளது.
மூன்றாவது இடத்தில் ரஷ்யா இருக்கிறது. ரஷ்யா நாள் ஒன்றுக்கு 1 கோடியே 75 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்துள்ளது. நான்காவது இடத்தில் கனடா நாடு நாள் ஒன்றுக்கு 57 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்திருக்கிறது.
சீனா ஐந்தாவது இடத்திலும், ஈராக் ஆறாவது இடத்திலும் உள்ளன. பிரேசில் ஏழாவது இடத்தில் இருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகம் எட்டாவது இடத்தில் உள்ளது.
ஈரான் ஒன்பதாவது இடத்திலும் குவைத் நாடு பத்தாவது இடத்திலும் உள்ளன. இந்த டாப் 10 கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் நாள் ஒன்றுக்கு 10 கோடி பேரல்கள் அளவுக்கு கச்சா எண்ணெயை உற்பத்தி செய்கின்றன. ஒரு பேரல் கச்சா எண்ணெய் பீப்பாயில் 159 லிட்டர் எண்ணெய் இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது.