கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி, 155 ஆம் கட்டைப் பகுதியில் நேற்று இரவு எரிவாயு சிலிண்டர் ஏற்றிக்கொண்டு வந்த வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றைய நபர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி, விநாயகபுரத்தைச் சேர்ந்த 33 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.