– யுத்த நிறுத்தத்திற்குஇணங்கிய பின்னர் குண்டுகளை வீசிய இஸ்ரேல் – டிரம்ப் கடும் அதிருப்தி
இஸ்ரேலிற்கும் ஈரானிற்கும் தாங்கள் என்ன செய்கின்றோம் என்பது தெரியவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.(don’t know what the f— they’re doing)
இருதரப்பும் யுத்தநிறுத்தத்தை மீறியுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
யுத்த நிறுத்தத்திற்கு இணங்கிய பின்னர் இஸ்ரேல் செயற்பட்ட விதம் குறித்து அவர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.ஈரானின் அணுஉலைகள் மீதான தாக்குதலின் பின்னர் அந்த நாட்டின் அணுசக்தி திறன் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானால் மீண்டும் அணுசக்தி திட்டத்தை முன்னெடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்த நிறுத்தத்திற்குஇணங்கிய பின்னர் குண்டுகளை வீசிய இஸ்ரேல் – டிரம்ப் கடும் அதிருப்தி
இஸ்ரேல் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கிய பின்னர் பெருமளவு குண்டுகளை வீசியது ,நான் ஒரு போதும் பார்த்திராத அளவிற்கு குண்டுகளை வீசினார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்தெரிவித்துள்ளார்.
நான் இஸ்ரேலின் இந்த நடவடிக்கை குறித்து மகிழ்ச்சியடையவில்லை, எனஅவர் தெரிவித்துள்ளார்
ஈரானின் நடவடிக்கைகள் குறித்தும் எனக்கு திருப்தியில்லை,என தெரிவித்துள்ள அவர் ஈரான் தவறுதலாக எய்திருக்க கூடிய தரையில் விழுந்து வெடிக்காத ஒரு ரொக்கட்டிற்காக இஸ்ரேல் இன்று காலை யுத்தநிறுத்தத்தை மீறுகின்றது என்றால் அது குறித்து நான் கடும் மகிழ்ச்சியற்றவனாக உள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.