“இஸ்ரேல்- ஈரான் இடையில் கடந்த 12 நாட்களாக சண்டை நடைபெற்று வருகிறது. இந்த சண்டையில் அமெரிக்கா தலையீடு செய்தால், சரி செய்ய முடியாத அளவிற்கு விளைவுகளை சந்திக்கும் என ஈரான் எச்சரிக்கை விடுத்தது.

ஈரான் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக இரண்டு வாரங்களில் முடிவு எடுக்கப்படும் என அமெரிக்க தெரிவித்த நிலையில், நேற்று முன்தினம் ஈரானில் உள்ள அணுஆயுத திட்டங்களை செயல்படுத்தும் இடத்தில் பயங்கர தாக்குதல் நடத்தியது.

பின்னர் ஈரான் இஸ்ரேல் மீதும், கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில்தான் நேற்றிரவு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இஸ்ரேல்- ஈரான் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டதாக அறிவித்தது.டிரம்பின் போர் நிறுத்தம் அறிவிப்புக்கு முன், இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.

இதனால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம் எனக் கூறி, இன்று காலை இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலுக்குப் பின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதாக ஈரான் தெரிவித்தது. அதேவேளையில், போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவித்த பின் ஈரான், சுமார் இரண்டரை மணி நேரம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளார்.ஒருவேளை இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், ஈரானும் பதில் தாக்குதல் நடத்தும்.

இதனால் போர் நிறுத்தம் நீடிக்குமா? என்பது இஸ்ரேலில் நடவடிக்கையின் மூலம்தான் தெரியவரும்.ஈரானை பொறுத்த வரையில், எந்தவொரு தாக்குதலுக்கும் தக்க பதில் தாக்குதல் நடத்தப்படும் உறுதியாக தெரிவித்துள்ளது.”,

Share.
Leave A Reply