ரஷ்யா விமான நிலையத்தில் திடீரென குழந்தையைத் தூக்கி தரையில் அடித்துவிட்டு, கூலிங் கிளாஸை சரிசெய்துகொண்டு, கேஷுவலாக இருப்பதுபோல பாவனை செய்து அங்கிருந்து தப்பி ஓடுகிறார்.

ரஷ்யாவின் விமான நிலையம் ஒன்றில் சுற்றுலா பயணி ஒருவர் ஒன்றரை வயது குழந்தையை தரையில் அடித்ததால் குழந்தை கோமா நிலைக்குச் சென்றுள்ளது.

குழந்தையின் கபாளத்தில் முறிவு மற்றும் முதுகுத்தண்டில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தி சன் செய்தித் தளம் தெரிவிக்கிறது.

குழந்தை குடும்பத்துடன் மாஸ்கோவில் தரையிறங்கிய சில நிமிடங்களிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளதாக சுற்றியிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாக பகிரப்பட்டுவருகிறது.

தனியாக நின்றிருந்த அந்த குழந்தையை நெருங்கிய வெள்ளை டிசர்ட் அணிந்திருந்த நபர், சுற்றும் முற்றும் யாராவது இருக்கிறார்களா எனப் பார்த்துவிட்டு திடீரென குழந்தையைத் தூக்கி தரையில் அடிக்கிறார். பின்னர் கூலிங் கிளாஸை சரிசெய்துகொண்டு, கேஷுவலாக இருப்பதுபோல பாவனை செய்து அங்கிருந்து தப்பி ஓடுகிறார்.

தாக்குதல் நடந்தபோது குழந்தையின் கர்ப்பிணி தாய் தள்ளு நாற்காலியை எடுக்க அருகில் சென்றிருந்ததாக சன் செய்தி தளம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய செய்தி தளங்கள் கூறுவதன்படி, குழந்தையைத் தாக்கிய நபர்ன் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த விளாடிமிர் விட்கோவ் என்ற 31 வயது ஆள்.

குழந்தையும் அவரது குடும்பமும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக ஈரானில் இருந்து ஆப்கானிஸ்தான் வழியாக ரஷ்யாவுக்குத் தப்பி வந்துள்ளனர்.

இந்த தாக்குதல் இனவெறி காரணமாக நடத்தப்பட்டதா அல்லது வேறு காரணங்களா என்பதை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதுவரையிலான விசாரணையில் குற்றவாளியும் அப்போதுதான் ரஷ்யா வந்திருக்கிறார் என்பதையும் அவரது ரத்தத்தை வைத்து கஞ்சா பயன்படுத்தியதாகக் கண்டறிந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும் தற்போது கொலை முயற்சி வழக்குப் பதியப்பட்டுள்ள விட்கோவ்வுக்கும் இதே வயதில் ஒரு மகள் இருப்பதாக ரஷ்ய மீடியாக்கள் தெரிவிக்கின்றன.
Also Read

Share.
Leave A Reply