இஸ்ரேல் ஈரான் போருக்கு பின்னர் இஸ்ரேலுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் இணைந்து செயற்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஈரானிய அதிகாரிகள் பலரை கைதுசெய்துள்ளதுடன் மரணதண்டனையையும் நிறைவேற்றியுள்ளனர்.

முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு ஈரானிய புலனாய்வு பிரிவிற்குள் இஸ்ரேலிய புலனாய்வாளர்கள் ஊருடுவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையிலேயே இந்த கைதுகளும் மரணதண்டனை நிறைவேற்றங்களும் இடம்பெறுகின்றன.

மோதலின் போது பல ஈரானிய உயர் அதிகாரிகள் கொல்லப்படுவதற்கு தகவல்களே முக்கிய காரணம் என ஈரானிய அதிகாரிகள் கருதுகின்றனர்.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர இராணுவத்தின் சிரேஸ்ட தளபதிகளும் அணுவிஞ்ஞானிகளும் இலக்குவைத்து கொல்லப்பட்டனர்இ ஈரானிற்குள் இஸ்ரேலின் மொசாட்டின் முகவர்களின் நடவடிக்கைகளே இதற்கு காரணம் என ஈரான் கருதுகின்றது.

இந்த கொலைகளின் துல்லியத்தன்மை மற்றும் அளவு காரணமாக அதிர்ச்சியடைந்துள்ள ஈரான் அதிகாரிகள் வெளிநாட்டு புலனாய்வாளர்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களை இலக்குவைக்கின்றனர்.நாட்டின் பாதூகாப்பிற்காக இந்த நடவடிக்கை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இது கருத்து வேறுபாடுகளை அடக்குவதற்கும் மக்கள் தொகை கட்டுப்பாட்டை இறுக்குவதற்கும் ஒரு வழியாகும் என்று பலர் அஞ்சுகின்றனர்.

12 நாள் மோதலின் போதுஇ இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கு ஈரானிய அதிகாரிகள் மரண தண்டனை விதித்தனர். போர் நிறுத்தத்திற்கு ஒரு நாள் கழித்து புதன்கிழமை இதே போன்ற குற்றச்சாட்டில் மேலும் மூன்று நபர்கள் தூக்கிலிடப்பட்டனர்.

இதையடுத்து நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான சந்தேக நபர்கள் உளவு பார்த்ததாக பார்த்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இஸ்ரேலிய உளவுத்துறையுடன் ஒத்துழைத்ததாக கூறப்படும் பல கைதிகளிடமிருந்து வரும் வாக்குமூலங்களை அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.

மனித உரிமைகள் குழுக்களும் ஆர்வலர்களும் சமீபத்திய சம்பவங்கள் குறித்து அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளன..

ஈரானின் நீண்டகால நடைமுறையான கட்டாய ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெறுதல் மற்றும் நியாயமற்ற விசாரணைகளை நடத்துதல் ஆகியவற்றை மேற்கோள் காட்டி. அதைத் தொடர்ந்து மேலும் மரணதண்டனைகள் நிறைவேற்றப்படலாம் என்ற கவலைகள் காணப்படுகின்றன.

ஈரானின் புலனாய்வு அமைச்சகம் மேற்கத்திய மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறை வலையமைப்புகள் – ஊஐயுஇ மொசாட் மற்றும் ஆஐ6 உட்பட – என்று அழைப்பதற்கு எதிராக “இடைவிடாத போராட்டத்தில்” ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜூன் 13 அன்று ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கியதிலிருந்து ஃபார்ஸ் செய்தி நிறுவனத்தின்படி “இஸ்ரேலிய உளவு வலையமைப்பு நாட்டிற்குள் மிகவும் தீவிரமாகிவிட்டது”. 12 நாட்களில் ஈரானிய உளவுத்துறை மற்றும் பாதுகாப்புப் படைகள் “இந்த வலையமைப்புடன் தொடர்புடைய 700 க்கும் மேற்பட்ட நபர்களை” கைது செய்ததாக ஃபார்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் தொடர்பான சமூக ஊடகப் பக்கங்களில் தங்கள் தொலைபேசி எண்கள் தோன்றியதாக ஈரானியர்கள் பிபிசி பாரசீகத்திடம் தெரிவித்தனர்.

இந்தப் பக்கங்களை விட்டு வெளியேற வேண்டும் அல்லது வழக்குத் தொடர வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பிபிசி பாரசீகம் லண்டனை தளமாகக் கொண்ட ஈரான் இன்டர்நேஷனல் மற்றும் மனோட்டோ டிவி உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள பாரசீக மொழி ஊடகங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மீது ஈரானிய அரசாங்கம் அழுத்தத்தை அதிகரித்துள்ளது

Share.
Leave A Reply