இளநீர் அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம்…..
தேவையான பொருட்கள்:
- இளநீர் – 3 கப்
- சர்க்கரை – 1 1/2 கப்
- நெய் – 3 தேக்கரண்டி
- ஏலக்காய் பொடி – 1/4 தேக்கரண்டி
- முந்திரி, திராட்சை – தேவையான அளவு
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் இளநீர் மற்றும் சர்க்கரையை சேர்த்து, அடுப்பில் வைத்து கிளறவும்.
- பின்பு அதில் நெய் சேர்த்து கிளறவும்.
- இளநீர் சுண்டியதும், அல்வா பதம் வந்தவுடன், ஏலக்காய் பொடி, முந்திரி, திராட்சை போன்றவற்றை சேர்த்து கிளறி இறக்கவும்.
- இறுதியாக ஒரு தட்டில் நெய் தடவி, அல்வாவை அதில் இட்டு, துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.