-ஜூலை 02 இல் முடிவு தெரியவரும்
தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதாக்கப்பட்டால் சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன் எம்.பியாகத் தெரிவாவார் என, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
அர்ச்சுனா இராமநாதனின் பாராளுமன்ற உறுப்புரிமையை இடைநிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு அண்மையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் ஜுலை 02ஆம் திகதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது.இந்நிலையில், நீதிமன்ற வளாகத்தில் ஊடவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலே அர்ச்சுனா எம்.பி இவ்வாறு குறிப்பிட்டார்.இதன்போது கருத்து வௌியிட்ட அவர்.
நீதிமன்றம் எனது பாராளுமன்ற உறுப்புரிமையை ரத்துச் செய்தால்,சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன் அந்தப்பதவிக்கு தெரிவார்.எனக்கு அடுத்தபடியான விருப்பு வாக்குகளை அவரே பெற்றுள்ளார்.
தாம்,பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் அல்லது கௌசல்யா பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் இரண்டும் ஒன்றுதான். இவ்வாறு அர்ச்சுனா எம்.பி ஊடகங்களிடம் தெரிவித்தார்.