காரைநகர் பாலத்தடியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் காரைநகர் – களபூமி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் ஆவார்.
தகவலின்படி, கடந்த 1ஆம் திகதி இரவு, குறித்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த லாண்ட்மாஸ்டர் வாகனமும் காரைநகர் பாலத்தடியில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த அவர், உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், வியாழக்கிழமை (03) உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி வின்சன் அன்ரலா மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனை முடிந்ததும், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.