இந்தியா – பாகிஸ்தான் இடையே சண்டை நடந்தபோது, இந்திய ராணுவம் பிரம்மோஸ் ஏவுகணையைக் கொண்டு தாக்கியபோது, முடிவெடுக்க வெறும் 30 வினாடிகளே இருந்ததாக பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் ராணா சனாவுல்லா பேசியிருக்கிறார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்தியா, பாகிஸ்தானின் நூர் கான் விமானப் படை தளத்தின் மீது, பிரம்மோஸ் ஏவுகணையைக் கொண்டு தாக்கியது.
அந்த பிரம்மோஸ் ஏவுகணையில், இந்திய ராணுவம் அணு ஆயுதத்தை ஏற்றியிருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்தது.
அதன் மீது முடிவெடுக்க, பாகிஸ்தான் ராணுவத்துக்கு 30-45 வினாடிகள்தான் இருந்தது.ஆனால், இந்த குறுகிய நேரத்தில் ஏதேனும் தவறான முடிவு எடுக்கப்பட்டிருந்தால், அது இரு நாடுகளுக்கும் இடையேயான அணு ஆயுதப் போராக மாறியிருக்கக் கூடும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
செய்தி ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில், இந்தியா அணு ஆயுதத்தைப் பயன்படுத்தியிருக்குமா என்று யோசிக்க எங்களுக்கு 30 வினாடிகளே இருந்தன.
இது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கக் கூடும். இந்தப் பக்கத்தில் இருந்தவர்கள், அந்த தருணத்தை தவறாகக் கணித்துவிட்டனர். இது உலகளவில் அணு ஆயுதப் போராக மாறியிருக்கக் கூடும் என்று தெரிவித்திருக்கிறார்..
இந்த நேர்காணல் விடியோ, சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
Pakistan begged Trump for a ceasefire after Indian Brahmos (Harmus) hit Noor Khan Airbase and Pak forces had no time to react.
– Admission of Pakistan’s defeat by Sp Assistant to Pak PM Rana Sanullahpic.twitter.com/vRnDxEwqCv
— Pakistan Untold (@pakistan_untold) July 3, 2025