திருப்பூர்: திருப்பூர் சேவூர் காவல் நிலையத்தில் ரிதன்யா மாமியார் சித்ரா தேவியின் மானம் காப்பதற்காக யாரையும் புகைப்படம் எடுக்கவிடாத வகையில் உறவினர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி இருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூரைச் சேர்ந்த இளம்பெண் ரிதன்யா திருமணமான 2 மாதத்தில் வரதட்சணை கொடுமையால் விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரப்பரை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து மாமியார் சித்ரா தேவியும் கைது செய்யப்பட்டார்.

மருத்துவ பரிசோதனைக்காக மாமியார் சித்ராதேவியை போலீசார் காவல் நிலையத்தில் இருந்து வெளியில் அழைத்து வந்த போது, அவரை யாரும் புகைப்படம் எடுக்காத வண்ணம் உறவினர்கள் அவருக்கு பாதுகாப்பு அளித்தனர்.

அது காவல்துறையினருக்கு சவால் விடும் வகையில் பந்தோபஸ்து பணியில் உறவினர்கள் ஈடுபட்டனர். இந்த வீடியோவை முழுமையாக கீழே பார்க்கலாம்.

Share.
Leave A Reply