பெய்ஜிங்: சீன அதிபராக ஜி ஜின்பிங் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் பொதுவெளியில் அதிகம் வருவது இல்லை.

சீனாவில் அதிபராக இருக்கும் நபர் பொதுவெளியில் தோன்றவில்லை என்றால் அதிகார மாற்றம் ஏற்படும் என்பது கடந்த கால வரலாறு.

இதனால் ஜி ஜின்பிங் விரைவில் அதிபர் பதவியில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இது நடக்கும் பட்சத்தில் சீனாவின் புதிய அதிபராக யார் வருவார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதில் ஜி ஜின்பிங் முதுகில் குத்திய ஜாங் யூக்ஸியா மற்றும் வாங் யாங் ஆகியோரின் பெயர்கள் டாப்பில் உள்ளனர்.

இவர்கள் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம். சீன அதிபராக 3வது முறையாக ஜி ஜின்பிங் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறது.

கடந்த 2012, 2018, 2023 என தொடர்ந்து சீன அதிபராக அவர் செயல்பட்டு வருகிறார். அவரது பதவிக்காலம் 2028 ம் ஆண்டு வரை உள்ளது.

ஏனென்றால் சீன அதிபரின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும் சீனாவில் ஒற்றை கட்சி ஆட்சி முறை உள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி தான் பிரதானமாக உள்ளது. xi jinping china சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பவரே சீனாவின் அதிபர் ஆவார்.

தற்போது ஜி ஜின்பிங் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்புடன் அதிபராக உள்ளார்.

இந்த பொறுப்பில் ஒருவர் 2 முறை மட்டுமே இருக்க முடியும். ஆனால் அதிபர் பதவியை தக்க வைக்க ஜி ஜின்பிங் கட்சி விதியில் கடந்த 2018 ல் திருத்தம் கொண்டு வந்தார்.

இதன்மூலம் தான் ஜி ஜின்பிங் 3வது முறையாக அதிபராகவும், கட்சியின் பொதுச்செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

தற்போது ஜி ஜின்பிங் ஓரம்கட்டப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் இறுதி முதல் 2 வாரம் வரை ஜி ஜின்பிங் திடீரென்று மாயமானார்.

சீனாவில் அதிபர் திடீரென்று மாயமானால் விரைவில் ஆட்சி மாற்றம் நிகழும் என்பது வரலாறாக உள்ளது.

கடந்த காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு பிறகே புதிய அதிபர்கள் தேர்வாகினர். இதனால் தற்போது சீனாவில் ஜி ஜின்பிங் அதிபர் பதவிக்கு முடிவுரை எழுதப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் சீனாவில் நடக்கும் செயல்கள் ஜி ஜின்பிங்கை ஓரம்கட்டும் வகையிலேயே உள்ளன. இதனால் விரைவில் புதிய அதிபர் தேர்வு செய்யப்படலாம் என்ற தகவல்கள் பரவி வருகின்றன.

அதுமட்டுமின்றி ஒருவேளை ஜி ஜின்பிங் அதிபர் பதவியில் இருந்து விலகும் பட்சத்தில் அந்த பதவிக்கு 2 பேரின் பெயர்கள் முன்னிலையில் உள்ளன.

அதில் முதல் இடத்தில் இருப்பவர் தான் மத்திய ராணுவ கமிஷன் துணை தலைவரான ஜெனரல் ஜாங் யூக்ஸியா.

இவர் ஜி ஜின்பிங்கின் தீவிர ஆதரவாளராக இருந்தார். ஜி ஜின்பிங் முதல் முதலாக அதிபராக இவர் பெரும் பங்கு வகித்தார்.

இதனால் தான் ஜாங் யூக்ஸியாவிற்கு முக்கிய பொறுப்பை வழங்கினார். மேலும் ஜி ஜின்பிங் நாட்டில் இல்லாதபோது ஜாங் யூக்ஸியா கட்டுப்பாட்டில் தான் சீனா செயல்படும்.

தற்போதும் அவர் கட்டுப்பாட்டில் தான் சீனா இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் தற்போது ஜாங் யூக்ஸியாவிற்கு அதிபர் பதவியின் மீது ஆசை வந்துள்ளது.

ஜி ஜின்பிங்கிற்கு முன்பு சீனாவின் அதிபராக இருந்த ஜிண்டோவோவின் ஆதரவாளர்கள் தற்போது ஜாங் யூக்ஸியாவிற்கு ஆதரவாக உள்ளனர்.

இதனால் ஜி ஜின்பிங்கை விட ஜாங் யூக்ஸியாவின் கை ஓங்கி உள்ளது. ஏற்கனவே ஜி ஜின்பிங்கின் ஆதரவாளர்களிடம் இருந்து பல்வேறு பதவிகள் பறிக்கப்பட்டன.

சீன ராணுவத்தின் ராக்கெட் படை, மேற்கு படை பிரிவிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஜாங் யூக்ஸியா தான் முக்கிய காரணம்.

ஜி ஜின்பிங்கின் ஆதரவாளர்களுக்கு பதிலாக தனக்கு விசுவாசமாக இருப்பவரை நைசாக உள்ளே கொண்டு வந்துள்ளார் ஜாங் யூக்ஸியா.

அவரை ஜின்பிங்கால் தடுக்க முடியவில்லை. ஜாங் யூக்ஸியாவை அடுத்த அதிபராக கொண்டு வர முன்னாள் அதிபர் ஜின்டாவோவின் ஆதரவாளர்கள் தீவிரமாக முனைப்பு காட்டி வருகின்றனர்.

தற்போது ஜி ஜின்பிங்கின் பியூசும் பிடுங்கப்பட்டுள்ளது. அதிபர் ஜிண்டோவேவின் ஆதரவாளர்களின் ஆதரவு உள்ளதால் அதிபர் பதவியை கைப்பற்றும் முயற்சியில் ஜாங் யூக்ஸியா முன்னிலையில் உள்ளார்.

மறுபுறம் இந்த லிஸ்ட்டில் 2வது இடத்தில் உள்ளவர் பெயர் தொழில்நுட்ப வல்லுநர் வாங் யாங்.

இவர் ஜி ஜின்பிங்கின் செல்லப்பிள்ளை என்று சொல்லப்படுகிறது. அதாவது தன்னிடம் இருந்து அதிபர் பதவியை பிடுங்கப்படும் பட்சத்தில் தனது ஆதரவாளரான வாங் யாங்கை அதிபர் பதவியில் அமர வைக்க ஜி ஜின்பிங் முடிவு செய்துள்ளார்.

இத்னமூலம் வாங் யாங்கை அதிபர் பதவியில் வைத்து கொண்டு மறைமுக அதிபராக செயல்பட ஜி ஜின்பிங் முடிவு செய்துள்ளார்.

இதற்கான வேலைகளில் அவர் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது

தான் மேலும் தன்னை போலவே கொள்கை, கோட்பாடுகளில் உறுதியாக இருக்கும் நபராக வாங் யாங்கை, ஜின்பிங் பார்க்கிறார்.

எதிர் தரப்பின் திட்டத்தை முறியடித்து வாங் யாங்கிடம் பதவியை ஒப்படைக்க தேவையான வேலையை ஜின்பிங் ஆரம்பித்து விட்டார் என்கின்றனர்.

இதனால் தற்போது சீனாவின் அதிபர் பதவிக்கான அதிகார போட்டி உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.

இதனால் சீன அரசியல் விவகாரம் தற்போது உலகளவில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. இருப்பினும் சீன அதிபராக ஜி ஜின்பிங் தொடர்வாரா? அல்லது வளர்த்த கிடவே மார்பில் பாய்ந்து ஜி ஜின்பிங்கிற்கு பதில் அதிபர் பதவியில் யாங் யூக்ஸியா எட்டிப்பிடிப்பாரா? இல்லாவிட்டால் ஜி ஜின்பிங் தனது அதிபர் பதவியில் இருந்து விலகி தனது ஆதரவாளர் வாங் யாங்கை நியமிக்க எடுக்கும் முயற்சி வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மொத்தத்தில் சீனாவின் அதிபர் பதவிக்கான அதிகார போட்டியில் ஜி ஜின்பிங் வெல்வரா? இல்லாவிட்டால் யாங் யூக்ஸியா வெல்வாரா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உலகளவில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply