செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 52 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது டன் 47 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டது.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தின் பன்னிரண்டாம் நாளான திங்கட்கிழமை(14) அன்று யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது.

இதேவேளை மனித புதைகுழி அகழும் இடத்தில் துணிகளை ஒத்த சில பொருட்களும் அடையாளம் காணப்பட்டது.

அத்துடன் செய்மதிப் படம் மூலம் அடையாளம் காணப்பட்ட பகுதியிலும் அகழ்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர்,தடயவியல் பொலிஸார்,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள், நல்லூர் பிரதேச சபையின் ஊழியர்கள் இணைந்து அகழ்வுப் பணியில் ஈடுபட்டனர்.

 

 

 

Share.
Leave A Reply