வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் 14 ஆம் நாள் இன்று (09) காலை முத்தேர் இரதோற்சவம் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கருவரையில் வீற்று இருக்கும் ஸ்ரீ நாகபூசணி அம்பாளுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று எம் பெருமான் வசந்தமண்டபத்தில் இருந்து எழுந்தருளி விநாயகர், நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் முருகன், வள்ளி, தெய்வானையில் வீற்று உள்வீதியுடாக வலம் வந்து வெளிவீதியுடாக வலம் வந்து முத்தேரில் வீற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.