காங்கேசன் துறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இரவு தபால் தொடருந்தில் மோதுண்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்றையதினம்(11) தொண்டைமானாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, நாற்பது வயதுடைய தொண்டைமானாறு பகுதியைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மதுபோதையில் வீழ்ந்த நிலையில், தொடருந்துடன் மோதியே அவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில், கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply