தனது சகோதரியின் 11 வயதான மகளை பலமுறை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மாமனை பொலிசார் கைது செய்துள்ளனர.
சில தினங்களுக்கு முன் சிறுமி கல்வி கற்கும் பாடசாலையில் இடம்பெற்ற பாலியல் விழிப்பூட்டல் நிகழ்ச்சி ஒன்றின் போது இச்சம்பவம் அம்பலத்துக்கு வந்துள்ளது.
விழிப்புணர்வு நடவடிக்கையின் பின்னர் அவ்வாறான பாலியல் மோசடி சம்பவங்களுக்கு மாணவிகள் உட்பட்டிருந்தால் அதனை எழுதித் தருமாறு நிகழ்ச்சியை நடத்திய ஆசிரியர்கள் கூறியதையடுத்து இச்சிறுமி கடிதம் ஒன்றின் மூலம் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து பாடசாலையில் ஒழுக்கத்துக்கு பொறுப்பான ஆசிரியை இவ்விடயத்தை பாடசாலை அதிபருக்கு தெரியப்படுத்தியதையயடுத்து, இவ்விடயம் பொலிஸ் நிலையத்தில் முறைபாடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு நாள் மாமா பாடசாலை விட்டதும் தன்னை அவரது வீட்டுக்கு அழைத்து செல்ல வந்ததாகவும் வரும் வழியில் கடை ஒன்றில் இருந்து லொலி பொப் ஒன்றை அவர் வாங்கித் தந்ததாகவும் அன்றையதினம் மாமி வீட்டில் இருக்கவில்லை எனவும் சிறுமி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்
இவ்வாறு பலமுறை தன்னை அவரது வீட்டுக்கு அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சிறுமி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.