காசாவில் உள்ள இஸ்ரேலிய படையினருக்கு எதிரான தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் ஹமாஸ் அமைப்பு புதிய இலக்கொன்றினை அடிப்படையாக கொண்டு செயற்பட தொடங்கியுள்ளது-இஸ்ரேலிய இராணுவீரர்களை பிடிப்பதே அந்த இலக்கு
கடந்த வாரம் காசாவின் தென்பகுதியில் ஹான் யூனிசில் ஹமாஸ் இஸ்ரேலிய இராணுவீரர் ஒருவரை உயிருடன் கைதுசெய்ய முயன்றவேளை அவர் கொல்லப்பட்டார்.
ஏப்பிரஹாம் ஏசுலாயின் (25) உடலை கொண்டு செல்வதற்கு ஹமாஸ் உறுப்பினர்கள் முயன்றனர் எனினும் இஸ்ரேலிய படையினரின் தாக்குதல் காரணமாக அந்த முயற்சியை கைவிட்டனர்.
போர்நிறுத்தம் தொடர்பான மறைமுக பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் இவ்வேளையில் இஸ்ரேலிய இராணுவீரர் ஒருவரை பிடித்துவைத்திருப்பது அல்லது அவர்களின் உடல்களை வைத்திருப்பது பேச்சுவார்த்தைகளில் ஹமாஸ் செல்வாக்கு செலுத்தும் நிலையை ஏற்படுத்தும் என மேலும் இஸ்ரேலில் பொதுமக்கள் கருத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இஸ்ரேலிய இராணுவீரரை உயிருடன் பிடிக்கும்அல்லது அவரின் சடலத்தை கைப்பற்றும் முயற்சி தோல்வியடைந்துள்ளது
ஆனால் இஸ்ரேலிய இராணுவவீரர்களை பணயக்கைதிகயாக பிடிக்கும் அவர்களின் உடல்களை கைப்பற்றும் முயற்சிகளை ஹமாஸ் அமைப்பு தீவிரப்படுத்தும் என டெல்அவி பல்கலைகழகத்தில் உள்ள பாலஸ்தீன கற்கைகளிற்கான பிரிவின் மைக்கல் மி;ல்ஸ்டெய்ன் தெரிவிக்கின்றார்.
2023ம் ஆண்டு 7 ம்திகதி பணயக்கைதிகளாக பிடித்தவர்களில் இன்னமும் 50 பேரை ஹமாஸ் தன்வசம்வைத்துள்ளது.இவர்களில் 28 பேரின் விடுதலை குறித்து பேச்சுவார்த்தைகளில் ஆராயப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யுத்தநிறுத்தத்திற்காக பணயக்கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்யலாம் அதேவேளை அந்த அமைப்பு இஸ்ரேலிய இராணுவவீரர்களை உயிருடன் பிடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என தெரிவிக்கும் ரமல்லாவை சேர்ந்த அரசியல் ஆய்வாளர் இதன் மூலம் எந்த உடன்படிக்கையும் மோதலிற்கு நிரந்தர முடிவை கொண்டுவரப்போவதில்லை என்பதை தெரிவிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
வெற்றிகரமான தாக்குதல்களை பிரச்சாரத்திற்காக பயன்படுத்துவதில் ஹமாஸ் அமைப்பு தனது திறமையை நிரூபித்துள்ளது. அதன் ஊடகங்கள்ள் கடந்த வார கடத்தல் முயற்சியின் வீடியோவை ஒளிபரப்பின. பிற படங்கள் இஸ்ரேலிய கவச வாகனங்கள் மற்றும் புல்டோசர்களை போராளிகள் தாக்குவதைக் காட்டின.
ஹமாஸின் மூலோபாயங்களை நன்கு அறிந்த கத்தாரை தளமாகக் கொண்ட பாலஸ்தீன ஆய்வாளர் கூறினார்: “இது பேச்சுவார்த்தைகளில் விளையாடுவதற்கு ஹமாசிற்கு ஒரு துரும்பினை வழங்குகின்றது -இது உளவியல் போரின் முக்கிய பகுதியாகும்.
ஹமாஸ் போராளிகளை ஊக்குவித்து காசாவில் உள்ள இஸ்ரேலிய வீரர்களையும் இஸ்ரேலில் உள்ள பொதுமக்களையும் மனச்சோர்வடையச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.”
ஹமாஸின் இராணுவ வலிமை எவ்வாறு குறைந்துள்ளது என்பதை இஸ்ரேலிய அதிகாரிகள் பலமுறை விவரித்துள்ளனர் மேலும் அதன் இராணுவபிரிவு பெரும இழப்பை சந்தித்துள்ளது என்பது குறித்து இராணுவ ஆய்வாளர்களிற்கு எந்த சந்தேகமும் இல்லை..
போரின் தொடக்கத்தில் சுமார் 30000 போராளிகள் காணப்பட்டனர் அவர்களில் 23000 பேர் வரை கொல்லப்பட்டதாக ஐடிஎஃப் ஆதாரங்களை வழங்காமல் கூறுகிறது.
ஹமாஸின் தலைமைத்துவ இழப்புகள் தெளிவாக உள்ளன. 2023 இல் செயலில் இருந்த பெரும்பாலான மூத்த மற்றும் நடுத்தர தளபதிகள் இப்போது இறந்துவிட்டனர்.
கத்தாரை தளமாகக் கொண்ட ஆய்வாளர் ஹமாஸ் காசாவில் “இரு நூறு உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருக்கக் கூடும். ஆனால் இது அதன் மூலோபாய நோக்கங்களுக்கு போதுமானது என்று கூறினார்
ஹமாஸிடம் இங்கே ஒரு சில மறைவிடங்கள் மாத்திரமே உள்ளன ஆனால் அவர்கள் தங்கள் வளங்களை மிகவும் கவனமாகவும் துல்லியமாகவும் பயன்படுத்துகிறார்கள்” என்று அவர் கூறினர்.
21 மாத மோதலின் போது ஹமாஸ் ஒரு “இராணுவ மாற்றத்தை” ஏற்படுத்தியுள்ளது ஒரு அரை-மரபுப் படையிலிருந்து கொரில்லாப் போருக்கு ஏற்ற ஒன்றாக மாறியுள்ளது என்றும் அதன் புதிய உத்தி காசாவில் ஏற்பட்ட பேரழிவிற்கு ஏற்றவாறு சிறப்பாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்றும் இராணுவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இஸ்ரேலிய தாக்குதலில் 57000 பேர் கொல்லப்பட்டனர் பெரும்பாலும் பொதுமக்கள் மற்றும் பரந்த பகுதிகள் இடிபாடுகளாக மாறியுள்ளன.
கடந்த வாரம் நடந்த ஒரு பதுங்கியிருந்து தாக்குதல் ஐந்து வீரர்களைக் கொன்றது மற்றும் ஒன்பது பேர் காயமடைந்தனர்.
பெய்ட் ஹனூன் ஒரு காலத்தில் காசாவின் வடக்கே செழிப்பான நகரமாக இருந்தது. இஸ்ரேலிய தாக்குதல்களால் நொறுக்கப்பட்ட கற்கள் மற்றும் முறுக்கப்பட்ட உலோகமாக மாற்றப்பட்டது. ஹமாஸின் சில விரிவான சுரங்கப்பாதை வலையமைப்பு இன்னும் அப்படியே உள்ளது இது இஸ்ரேலின் வான் சக்தி மற்றும் கண்காணிப்பு திறன்களிலிருந்து தப்பிக்கும் வழியை வழங்குகிறது
முன்னாள் ஐ.டி.எஃப்( இஸ்ரேலிய இராணுவம்) இராணுவ வரலாற்றாசிரியரும் அந்தக் குழுவின் நிபுணருமான கை அவியாட் கூறினார்: “இது ஐ.டி.எஃப்-க்கு மிகவும் சிக்கலான போர்க்களம். ஹமாஸ் அனைத்து இடிபாடுகளையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. அவர்கள் கொரில்லாப் போரில் நிபுணர்கள் மற்றும் 20 ஆண்டுகளாக இஸ்ரேலுடன் சண்டையிட்டு வருகின்றனர்
காசாவில் உள்ள இராணுவத் தலைவர்களுக்கும் கத்தார் மற்றும் இஸ்தான்புல்லில் உள்ள ஹமாஸின் அரசியல் தலைமைக்கும் இடையேயான தொடர்புகள் திறந்தே இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.
போர் தொடங்கியதிலிருந்து அப்போதைய தலைவர் இஸ்மாயில் ஹனியே உட்பட இரண்டு குறிப்பிடத்தக்க அரசியல் தலைவர்கள் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்லாமிய உலகின் பெரும்பகுதியிலும் பிற இடங்களிலும் உள்ள தூதர்கள் அதிகாரிகள் ரகசிய செயல்பாட்டாளர்கள் மற்றும் அனுதாபிகளின் குழுவின் வலையமைப்பும் பெரும்பாலும் அப்படியே உள்ளது மற்றும் அமைப்புக்காக நிதி திரட்டி வருகிறது
2007 முதல் காசாவை ஹமாஸ் ஆட்சி செய்து வந்தது அதன் அதிகாரிகள் இன்னும் பெயரளவிற்கு அமைச்சகங்கள் நகராட்சி அதிகாரிகள் மற்றும் பலவற்றை நடத்துகிறார்கள் இருப்பினும் குற்றவியல் கும்பல்கள். சமூகத் தலைவர்களின் கூட்டணிகள் மற்றும் இஸ்ரேலால் ஆதரிக்கப்படும் புதிய போராளிகள் உள்ளிட்ட பிற ர் அதன் மீதமுள்ள அதிகாரத்திற்கு எதிராக போட்டியிடுவதால் பிரதேசத்தின் மீதான அதன் பிடி நழுவி வருகிறது.
ஹமாஸ் அதிகாரிகளும் பாதுகாப்புப் பணியாளர்களும் ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட குறைவாகவே இருப்பதாக பிரதேசத்தில் உள்ள உதவிப் பணியாளர்கள் கூறுகின்றனர்
இந்தப் பிரதேசத்தில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய சமீபத்திய சுற்று போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த மாதம் பத்து ஐ.டி.எஃப் வீரர்களும் ஜூலையில் 20 வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
“இஸ்ரேலின் அதிகாரத்தில் சில வரம்புகளை விதிக்கும் மற்றும் உலகம் முழுவதும் பொதுமக்களின் கருத்தை ஓரளவு பாதிக்கும் ஒரு வகையான போர் நிறுத்தப் போரை நாங்கள் இப்போது காண்கிறோம்” என்று ஹமாயேல் கூறினார்.
ஹமாஸ் யுத்தநிறுத்ததிற்கு தயாராக உள்ளது ஆனால் அந்த அமைப்பு ஏற்றுக்கொள்ள முடியாததை ஏற்றுக்கொள்ள தயாராகயில்லை,நாங்கள் இங்கு இஸ்ரேலில் ஹமாஸிற்கு எதிராக மேலும் மேலும்கடும் அழுத்தங்களை கொடுத்தால் அவர்கள் இறுதியில் விட்டுக்கொடுப்பார்கள் என்ற கருத்தில் அடிப்படையில் செயற்படுகின்றோம்.
ஆனால் நாங்கள் எவ்வளவு அழுத்தங்களை கொடுத்துவிட்டோம் ஆனால் அவர்களின் தலைவர்களை அழித்துவிட்டோம் காசாவை அழித்துவிட்டோம் ஆனால் ஹமாசின் அடிப்படை மனோபாவத்தையும் வேண்டுகோள்களையும் எங்களால் ( இஸ்ரேலால் ) மாற்ற முடியவில்லை என மில்ஸ்டெய்ன் தெரிவித்தார்.