நினா குடினா என்ற ரஷ்யப் பெண்ணும் அவரது குழந்தைகள் பிரேமா (6) மற்றும் அமா (4) ஆகியோரும் இருந்தனர்.

கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உத்தர கன்னடத்தின் தொலைதூரப் பகுதியில் உள்ள ஒரு குகையில் தனது இரண்டு இளம் குழந்தைகளுடன் வசித்து வந்த ரஷ்யப் பெண்ணை காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

ரோந்துப் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள், ஒரு மலைக்குக் கீழே சுமார் 700–800 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு குகையின் நுழைவாயிலில் துணிகள் தொங்கிக்கொண்டிருப்பதைக் கவனித்தனர்.

அவர்கள் ஆபத்தான காட்டுப் பாதை வழியாக குகையை நோக்கிச் சென்றபோது, தங்க நிற முடியுடன் கூடிய ஒரு சிறுமி குகையிலிருந்து வெளியே ஓடி வருவதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.

“குகையைச் சுற்றி பாம்புகள் திரிவதைக் காண முடிந்தது. கடந்த ஆண்டு ராமதீர்த மலைகளைச் சுற்றி நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் இந்தப் பகுதி ஆபத்தானதாக உள்ளது. அதனால்தான் ரோந்துக் குழு சுற்றுப்புறங்களைச் சோதனை செய்து வருகிறது” என்று உத்தர கன்னட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். நாராயணா பிபிசியிடம் தெரிவித்தார்.

‘கடவுளுக்கு சேவை செய்வதாகக்’ கூறும் ரஷ்யப் பெண்

குகைக்குள் நினா குடினா (40) என்ற ரஷ்யப் பெண்ணும், அவரது குழந்தைகள் பிரேமா (6) மற்றும் அமா (4) ஆகியோரும் இருந்தனர்.மேலும், ஆன்மிக ரீதியில் இந்தியா வந்த அவர், தியானம் மற்றும் பிரார்த்தனைக்கு அமைதியான இடத்தை தேடி வந்தபோது இங்கு வந்து தங்கியதாக தெரிவித்தார்.

இதனையடுத்து அந்த இடத்தில் நிலவும் ஆபத்து குறித்து விளக்கிய போலீசார் அவரை பாதுகாப்பாக அழைத்து சென்று ஆன்மிக மடம் ஒன்றில், அவரின் கோரிக்கைப்படி தங்க வைத்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் நினாவின் ஆவணங்கள் குகை பகுதியில் தொலைந்துவிட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து அந்த பகுதிக்கு மீண்டும் சென்ற போலீசார், ஆவணங்களை தேடி கண்டுபிடித்தனர். பாஸ்போர்ட் மற்றும் விசாவை ஆய்வு செய்தில், கடந்த 2017 ம் ஆண்டு வர்த்தக விசாவில் நினா இந்திய வந்துள்ளார். 2018 ம் ஆண்டு ஏப்.,19 ல் காலாவதியாகிவிட்டது.

அதுவரை கோவாவில் தங்கியிருந்த அவர் மீண்டும் கிளம்பி சென்று நேபளாளம் வழியாக மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி வந்து சட்டவிரோதமாக தங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு வாரத்திற்கு முன்பு, அந்த ரஷ்யப் பெண் சில காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் வாங்கி வந்துள்ளார். அவர்கள் விறகுகளைப் பயன்படுத்தி சமைத்துள்ளனர். காவல்துறையினர் அங்கு பிரபலமான நூடுல்ஸ் மற்றும் சாலட் பிராண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்தனர்.

“எங்கள் குழுவினர் பாண்டுரங்க விட்டல் சிலையை அவர் வணங்குவதைக் கண்டறிந்தனர். ‘கிருஷ்ணர் தன்னை தியானம் செய்ய அனுப்பினார். நான் தவம் செய்து வருகிறேன்’ என்று கூறினார்” என்கிறார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

நீனா, காவல்துறையிடம் தனது பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டதாக கூறியுள்ளார்.

ஆனால், காவல்துறையினரும் வனத்துறை அதிகாரிகளும் அவரது பாஸ்போர்ட்டை கண்டுபிடித்தனர்.

அப்பெண் அவ்வப்போது இந்தியாவுக்கு வந்துள்ளார். ஆனால் அவரது விசா 2017-ல் காலாவதியாகியுள்ளது.

எப்போதில் இருந்து அப்பெண் அங்கு வசித்து வருகிறார்?

அப்பெண் முந்தைய ஆண்டுகளில் அவ்வப்போது இந்தியாவுக்கு அவ்வப்போது வந்துள்ளார். ஆனால் அவரது விசா 2017-ல் காலாவதியாகியுள்ளது.

படக்குறிப்பு, கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உத்தர கன்னடத்தின் தொலைதூரப் பகுதியில் உள்ள ஒரு குகையில் தனது இரண்டு இளம் குழந்தைகளுடன் வசித்து வந்த ரஷ்யப் பெண்ணை காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

நீனா, 2016 அக்டோபர் 18 முதல் 2017 ஏப்ரல் 17 வரை வணிக விசாவில் இந்தியாவில் இருந்தார்.

விசா காலாவதியான பிறகு, கோவாவில் உள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகம் (FRRO) அவருக்கு ஏப்ரல் 19, 2018 அன்று வெளியேறும் அனுமதியை வழங்கியது.

அதன்பின், நீனா நேபாளத்திற்குச் சென்று, 2018 செப்டம்பர் 8 அன்று மீண்டும் இந்தியா திரும்பி உள்ளார்.

இந்நிலையில், காவல்துறையினர் அவரை ஒரு பெண் நடத்தும் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரது இரு குழந்தைகளும் குழந்தைகள் இல்லத்திற்கு மாற்றப்பட்டனர்.

பின்னர், நீனாவும் அவரது குழந்தைகளும் பெங்களூருவில் உள்ள வெளிநாட்டினருக்கான காவல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டனர்.

– இது, பிபிசி நியூஸ்-

Share.
Leave A Reply