சென்னை: நடிகை நயன்தாரா இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக சினிமாத் துறையில் தனது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், இந்தி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு பிறகும் பெரிய படங்களில் பிஸியாக நடித்து வரும் நயன்தாரா, ஒரு விளம்பரத்தில் நடித்ததற்கு, வாங்கிய சம்பளம் தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.

சில நொடிகள் மட்டுமே வரும் அந்த விளம்பரத்திற்கு பல கோடியில் சம்பளத்தை வாங்கி இருக்கிறார் நயன்தாரா.

நடிகை நயன்தாரா கடந்த 22 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உள்ளார்.

2003 ஆம் ஆண்டில் மலையாள திரைத்துறையில் என்ட்ரி கொடுத்த நயன்தாரா, அடுத்துத்து ஆறு படங்களில் நடித்தார்.

அதன் பிறகு 2005 ஆம் ஆண்டில் தமிழில் ஐயா, சந்திரமுகி, கஜினி, வல்லவன் போன்ற படங்கள் நடித்தார்.

இந்த படங்கள் தெலுங்கிலும் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றதால், டோலிவுட் படங்களிலும் நயன்தாராவிற்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

முதலில் லக்ஷ்மி, பாஸ், யோகி, துபாய் சீனு, துளசி, ஆஞ்சநேயுலு, அதர்ஸ், ஸ்ரீராம ராஜ்யம், ராஜாராணி போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவிலும் ஒரு ரவுண்டு வந்தார்.

 லேடி சூப்பர் ஸ்டார்: நயன்தாரா, சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் சரியான கதைகள் கிடைக்காததால் வெற்றி பெற சிறிது காலம் ஆனது.

அதன் பின் வெளியான சந்திரமுகி, கஜினி, லக்ஷ்மி, துளசி, அதர்ஸ் போன்ற படத்தின் வெற்றியால், முன்னணி ஹீரோயின் மாறினார்.

ரஜினிகாந்த், சூர்யா, அஜித், விஜய், தனுஷ், விஜய்சேதுபதி போன்ற ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

அதேபோல் டோலிவுட், மாலிவுட்டிலும் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து ஜோடி போட்டு நடித்தார்.

இப்படி ஒரு கட்டத்தில் உச்ச நிலைக்கு சென்ற நயன்தாராவை அவரது ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியுடன் அழைத்து வந்தனர்.

 ஒரு செகண்டுக்கு 10 லட்சம்: நயன்தாரா தற்போது ஒரு படத்திற்கு 5 கோடி முதல் 10 கோடி வரை சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

சமீபத்தில் நயன்தாரா டாடா ஸ்கை பிசினஸ் விளம்பரத்தில் நடித்திருந்தார். இந்த விளம்பரத்தில் நடிக்க நயன்தாரா ரூ.5 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த விளம்பரம் 50 நொடிகள் வரை இருக்கும் என்றும், அப்படி என்றால், ஒரு நொடிக்கு ரூ.10 லட்சத்தை நயன்தாரா கட்டணமாக வசூலித்ததாக சினிமா வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

நயன்தாராவின் சம்பளத்தை பார்த்து முன்னணி நடிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் விளம்பரத்திற்கு இத்தனை கோடியா என கேட்டு வருகின்றனர்.

தற்போது நயன்தாரா மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் ஒரு படத்தில் கமிட்டாகி உள்ளார். இந்த படம் சிரஞ்சீவியின் 157வது திரைப்படமாகும்.

மேலும், கே.ஜி.எஃப் புகழ் யாஷூக்கு ஜோடியாக ‘டாக்ஸிக்’ என்ற பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்கிறார்.

அதேபோல் பல மொழிகளில் டியர் ஸ்டூடண்ட்ஸ், ஹாய், மன்னங்கட்டி, சின்ஸ் 1960, பேட்ரியாட், மூக்தி அம்மன் 2, ராக்காயி போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

Share.
Leave A Reply