“தெலுங்கானாவில் மேடக் மாவட்டத்தில் காங்கிரஸ் பட்டியலின பிரிவு செயலாளர் எம். அனில், காரில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
திங்கள்கிழமை இரவு, அவரை இரு கார்களில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், அவரது காரை வழிமறித்து துப்பாக்கியால் நான்கு முறை சுட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அனில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டதால், பண தகராறு காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதற்கு ஒரு நாள் முன்னதாக, மாலக்க்பேட்டில் காலை நடைப்பயிற்சி சென்ற சி.பி.ஐ (கம்ம்யூனிஸ்ட்) மாநில கவுன்சில் உறுப்பினர் கே. சந்து நாயக் (47), அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்.
நிலத்தகராறு காரணமாக ஏற்பட்ட பகையால் இக்கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
தாக்குதலில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், ஒரு துப்பாக்கி மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.”,