கிளிநொச்சி-இரணைமடு குளத்தில் மீன் பிடிப்பதற்காக வலையை எறிந்து கொண்டிருந்த வேளை தவறி நீரில் வீழ்ந்து மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி சாந்தபுரத்தைச் சேர்ந்த பிச்சை துரைராசா (வயது 64) என்ற ஆறு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழபந்துள்ளார்.