“மதுரை மாவட்டத்தில் அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் பூபாலன். இவரது மனைவி தங்கபிரியா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் காவலர் பூபாலன் தனது மனைவிக்கு வெகு நாட்களாக வரதட்சணை கொடுமை அளித்து வந்தார்.

இதனால் கணவன் மனைவி இருவரிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது.இந்த நிலையில், திருமணத்தின் போது 60 பவுன் நகை மற்றும் லட்சக்கணக்கில் பணம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.

இது போக கூடுதலாக நகை மற்றும் பணம் வரதட்சணையாக வேண்டும் என்றும், வீடு கட்டி தர வேண்டும் என்றும் காவலர் பூபாலன் தனது மனைவியிடம் வற்புறுத்தி வந்துள்ளார்.

இதில், கணவன் மனைவியிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரம் அடைந்த பூபாலன் தனது மனைவியை கொடூரமான முறையில் தாக்கி சித்தரவதை செய்துள்ளார்.

அப்போது, பூபாலன் தனது தங்கையை செல்போனில் தொடர்பு கொண்டு தனது மனைவியை வரதட்சணை கொடுமை செய்து தாக்கியதாக அவர் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து பலத்த காயமடைந்த அந்த பெண் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பெயரில், காவலர் பூபாலன், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் பூபாலனின் தந்தை செந்தில்குமரன்,

அவரது மனைவி விஜயா, மகள் அனிதா ஆகிய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான பூபாலனை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தனது மனைவியை அடித்து துன்புறுத்தியதாக சகோதரி அனிதாவிடம் காவலர் பூபாலன் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்த ஆடியோ வைரலாகி வருகிறது.

அதில், தங்கப்பிரியாவை அடித்து துன்புறுத்தியதாகவும், அவளது வாயில் நகத்தை வைத்து பிராண்டியதாகவும், கழுத்தை பிடித்து நெரித்தாகவும், அவள் காலை மடக்கியதால் நொன்டி நொன்டி நடக்கிறால். அவளது உடம்பை நல்லபாம்பு நெழிப்பது போல நெழித்து எடுத்து விட்டேன்.

அதற்கு, பூபாலனின் தங்கை அனிதாவும் வாய் அதிகமாக பேசினால் இப்படி தான் அடிவிழும் என்று தங்கப்பிரியாவிடம் சொல்லிவிடு என்று தெரிவிக்கிறார்.”,

Share.
Leave A Reply