தென்மேற்கு டெல்லியில் உள்ள துவாரகா பகுதியில் 35 வயதான நபர் அவரின் மனைவி மற்றும் மனைவியின் காதலானால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மனைவியின் காதலன் வேறு யாருமில்லை, அந்த பெண்ணின் மைத்துனன்தான். இந்த கொலைச் சம்பவத்தில் பல பகீர் தகவல்களும் வெளிவந்துள்ளன. அவற்றை இங்கு காணலாம்.

சுஷ்மிதா தேவ் என்ற பெண்மணி அவரது காதலனும், மைத்துனருமான ராகுல் தேவ் என்பவருடன் இணைந்து கரண் தேவ் என்ற அவரின் கணவருக்கு மாத்திரை கொடுத்து, அவருக்கு ஷாக் கொடுத்து கொலை செய்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

Delhi Husband Murder: 13ஆம் தேதி உயிரிழந்த கரண் தேவ்

கரண் கடந்த ஜூலை 13ஆம் தேதி சந்தேகத்திற்கிடமான வகையில் உயரிழந்துள்ளார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டபோதே இது கொலை என்றும் இந்த கொலையில் சுஷ்மிதாவும், ராகுலும் ஈடுபட்டிருக்கிறார் என்பதும் போலீசாருக்கு தெரியவந்திருக்கிறது.

ஆரம்பத்தில், கரணுக்கு ஷாக் அடித்து அவர் சுய நினைவின்றி இருப்பதாக சுஷ்மிதா கரணின் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனே கரண் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக டெல்லி போலீசார் உறுதிசெய்துள்ளனர்.

இருப்பினும், கரண் தேவ் மரணத்தில் சந்தேகம் எழுந்ததால் அவரது உடலை உடற்கூராய்வு பரிசோதனைக்கு போலீசார் உட்படுத்தி உள்ளனர். ஆனால், கரண் தேவின் தந்தை, ராகுல் தேவ் மற்றும் சுஷ்மிதா ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தியிருக்கிறது.

Delhi Husband Murder: 2 ஆண்டுகள் கள்ள உறவு

ஆனால், கொலை வழக்கு விசாரணையில் பெரிய திருப்பமாக அமைந்ததே உயிரிழந்த கரணின் இளைய சகோதரரான குனால் எடுத்த முக்கிய முடிவுதான் எனலாம். குனால் சுஷ்மிதாவின் மொபைலை ஆய்வு செய்து பார்த்தபோது, அதில் சுஷ்மிதா ராகுல் உடன் கொண்டிருந்த திருமணத்தை தாண்டிய உறவு வெளிச்சத்திற்கு வந்தது.

மேலும், அவர்கள் கரண் தேவை கொல்ல மொபைல் சேட்டிங் மூலம் திட்டமிட்டதும் தெரியவந்தது. உடனே குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, சுஷ்மிதா மற்றும் ராகுல் போலீசார் கைது செய்தனர்.

மொபைல் உரையாடலில், ராகுல் தேவ் சுஷ்மிதாவிடம் கொலை செய்வதற்கான திட்டங்களை வகுத்து கொடுத்துள்ளார். முதலில், கரண் தேவை கொலை செய்ய அவர் மயக்க மருந்தை கொடுத்துள்ளார்.

சுஷ்மிதா மற்றும் ராகுல் ஆகியோர் கடந்த 2 ஆண்டுகளாக திருமணத்தை தாண்டிய உறவில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும், சுஷ்மிதா – ராகுல் மொபைலில் கொலை செய்தவதற்கு பிளான் போட்ட உரையாடல் ஒன்றும் தற்போது வெளியாகி உள்ளது. அது பின்வருமாறு:

Delhi Husband Murder: மொபைல் சேட்டிங் சதி திட்டம்

சுஷ்மிதா: அந்த மருந்தை சாப்பிட்டதும் உயிரிழப்பதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதை சரிபாருங்கள். அதை அவர் சாப்பிட்டு மூன்று மணிநேரம் ஆகிவிட்டது, ஆனால் இப்போது வரை அவர் வாந்தி எடுக்கவில்லை, ஒன்றுமே நடக்கவில்லை. இன்னும் அவர் உயிரிழக்கவில்லை. இப்போது நாம் என்ன செய்வது? எதாவது சொல்.

ராகுல்: உனக்கு வேறு ஏதும் திட்டம் தோன்றவில்லை என்றால், அவருக்கு ஷாக் கொடுத்துவிடு.

சுஷ்மிதா: அவருக்கு ஷாக் கொடுக்க அவரை எப்படி கட்டிப்போடுவது…?

ராகுல்: டேப்பை பயன்படுத்தி அவரை கட்டிப்போடு.

சுஷ்மிதா: அவர் மூச்சு தற்போது மெதுவாகி உள்ளது.

ராகுல்: உன்னிடம் உள்ள மருந்து அனைத்தையும் அவருக்கு கொடு.

சுஷ்மிதா: அவரின் வாயை திறக்கவே முடியவில்லை. அவரது வாயில் தண்ணீர் ஊற்ற முடியும் ஆனால் மருந்து கொடுக்க முடியவில்லை. நீ இங்கு வா, இரண்டு பேரும் சேர்ந்து அவருக்கு மருந்தை கொடுக்க முடியுமா என்று பார்ப்போம் என பேசியுள்ளனர்.

தற்போது சுஷ்மிதாவும் ராகுலும் போலீசாரின் விசாரணையில் உள்ளனர். அவர்களுக்கு எதிரான ஆதரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

Share.
Leave A Reply