சென்னை: நடிகை த்ரிஷாவுக்கு அவரது செல்லப்பிராணிகள் என்றாலே கொள்ளை பிரியம். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நுழைந்தாலே தனது செல்லப் பிராணிகளுடன் இணைந்து அவர் விளையாடிய புகைப்படங்களை அதிகம் பார்க்கலாம்.

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் வைத்துள்ள ஸ்டோரியைப் பார்த்து ரசிகர்கள் பலரும் அது குறித்து இணையத்தில் பேசத் தொடங்கி விட்டார்கள்.

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் த்ரிஷா வளர்த்து வந்த செல்ல பிராணி இறந்து விட்டது. அது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருத்தமாக பதிவிட்டார்.

இம்முறை தனது வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இல்லை எனவும், தனது மகன் இறந்து விட்டர் எனவும் தெரிவித்தார்.

அவருக்கு நெருக்கமான நடிகைகள் பலரும் த்ரிஷாவிடம் இது தொடர்பாக பேசி ஆறுதல் கூறினார்கள்.

அதன் பின்னர்தான் த்ரிஷா தற்போது வளர்த்து வரும் இஸ்ஸி என்ற நாய்க்குட்டி அவர் வாங்கினார்.

இந்த நாய்க்குட்டி அவருக்கு பரிசாக கொடுக்கப்பட்டது என்று பலரும் கூறுகிறார்கள். காரணம், இந்த நாய்க்குட்டியின் புகைப்படத்தை த்ரிஷா முதன் முதலாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி தான் பகிர்ந்தார்.

எனவே காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி த்ரிஷாவுக்கு இந்த நாய்க்குட்டி பரிசாக கொடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் இணையவாசிகள் சிலர் கூறினார்கள்.

20 ஆயிரம் முத்தங்கள்:

இந்நிலையில் த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் தனது நாய்க்குட்டியின் பெயரில் தொடங்கிய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட ஸ்டோரியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் தனது நாய்க்குட்டி செய்த சேட்டைகள் குறித்த வீடியோக்களை பகிர்ந்துள்ளார். மேலும் தனது நாய்க்குட்டியின் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, 3 ட்ரீட்களும் 20 ஆயிரம் முத்தங்களும் பெற்ற பின்னர்தான் ஓ.கே. ஆகியுள்ளது என கேப்ஷன் இட்டுள்ளார்.

விஜய் கொஞ்சிய நாய்க்குட்டி: இதனைப் பார்த்த ரசிகர்களும் இணையவாசிகளும் விஜய் கையில் தூக்கி கொஞ்சிய நாய்க்கு த்ரிஷா 20 ஆயிரம் முத்தங்களைக் கொடுத்துள்ளாரே, என கமெண்ட் அடுத்து வருகிறார்கள்.

விஜய்யின் 51வது பிறந்த நாளில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க த்ரிஷா பகிர்ந்திருந்த புகைப்படத்தில் த்ரிஷாவின் செல்ல நாய் குட்டியும் இருந்தது.

அதில் விஜய், த்ரிஷாவின் செல்ல நாய் குட்டியை தூக்கிக் கொஞ்சுகிறார். இந்த புகைப்படத்தை பகிர்ந்து விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த போதே, ரசிகர்கள் பலரும் இந்த நாய் குட்டி த்ரிஷாவுக்கு விஜய் கொடுத்த பரிசாகக் கூட இருக்கலாம் எனவும் சிலர் அப்போதே கமெண்ட் அடித்தார்கள்.

 ரசிகர்கள் ரியாக்‌ஷன்: விஜய்யின் பிறந்த நாள் என்றாலே த்ரிஷா தன் மீது தனி கவனம் விழ வேண்டும் என ஏதாவது செய்து கொண்டிருக்கிறார் என்றெல்லாம் கூட சில இணையவாசிகள் கமெண்ட் அடித்தார்கள்.

இந்த விமர்சனங்களுக்கு த்ரிஷா மறைமுகமாக பதிலடியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே பதிவிட்டிருந்தார்.

அதாவது தவறான மனிதர்களிடத்தில் தவறான எண்ணங்கள் தான் எப்போதும் இருக்கும். அவர்களிடத்தில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் என்றெல்லாம் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

த்ரிஷா தனது செல்லப்பிராணிக்கு 20 ஆயிரம் முத்தங்கள் கொடுத்ததாக பதிவிட்டுள்ள ஸ்டோரி ரசிகர்கள் மத்தியிலும் இணையவாசிகள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Share.
Leave A Reply