தாய்லாந்து மற்றும் கம்போடியா என இரு நாடுகளும் தென் கிழக்கு ஆசிய நாடுகளாகும். இந்த இரு நாடுகளும் மியான்மருக்கு அடுத்ததாக அமைந்துள்ளன.
இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், பிரபல நாடான மலேசியாவுக்கு அருகில் அமைந்துள்ளன. நம் இந்திய நாட்டில் இருந்து சுமார் 3000 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. இச்சூழலில் அண்டை நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போட்டியா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
கம்போடியா மீது தாய்லாந்து போர் விமானங்கள் மற்றும் பீரங்கிகள் முலமாக குண்டு வீசி வருகிறது.
அதேபோல் கம்போடியாவும் தாய்லாந்து மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இரு நாடு எல்லைகளில் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இந்த இரு நாடுகளும் சிவன் கோயிலுக்காக அடித்துக்கொள்கிறது என கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் இந்த இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளதற்கு முக்கிய காரணம், சிவபெருமானை முக்கிய தெய்வமாக கொண்டுள்ள பழமை இந்து கோயில்தான்.
அண்டை நாடுகள் என்றாலே பிரச்சனை இருப்பது சகஜமான ஒன்றுதான். அப்படி தாய்லாந்து – கம்போடியா இடையே நீண்டகாலமாகவே எல்லை பிரச்சனை இருந்து வருகிறது.
இந்த எல்லை பிரச்சனை தற்போது போராக மாறி இருக்கிறது. நேற்றைய தினம்தான் இவர்களின் எல்லை பிரச்சனை போராக மாறியது.
இரு நாட்டு இரானுவ வீரர்களும் எல்லையில் கடுமையாக மோதிக் கொண்டனர். தாய்லாந்து கம்போடியாவின் இராணுவ நிலைகளை குறிவைத்து தாக்கியது. கம்போடியாவும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை இந்த மோதலில் 14 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரீயா விஹார் கோயில்
இரு நாடுகளின் எல்லையாக டாங்ரேக் மலை அமைந்துள்ளது. இங்கு சுமார் 95 கி.மீ தொலைவில் 12 ஆம் நூற்றாண்டின் சிவன் ஆலயமான தா முயென் தோம் கோயில் அமைந்துள்ளது.
இதனை 13ஆம் நூற்றாண்டில் 7ஆம் ஜெயவர்மன் எனும் மன்னர் கட்டினார். இங்கிருந்து சுமார் 340 தொலைவில் பிரசாத் தா முயன் டோட் உள்ளது. இந்த இரு கட்டங்களுக்கும் முன்பாக பிரசாத் தா முயென் தோம் என்ற சிவன் கோயில் அமைந்துள்ளது.
இக்கோயில் 12 நூற்றாண்டில் மன்னர் இரண்டாம் உதயாதித்யவர்மனால் கட்டப்பட்டது ஆகும். இங்கு முக்கிய தெய்வமாக சிவபெருமான் உள்ளார்.
இந்த கோயில் மற்றும் புத்த மதத்துடன் தொடர்புடைய இரு கட்டங்கள் அருகருகே அமைந்துள்ளது. இது யாருக்கு சொந்தம் என்பதில் தான் பிரச்சனை. இந்த பிரச்சனை பல ஆண்டுகளாக உள்ளது. தற்போது இப்பிரச்சனை போராக மாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லைகள் மூடல்
இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சனை கடந்த சில நாட்களாக பெரிதாக மாறி உள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளும் தங்களின் எல்லைப் பகுதிகளை மூடி உள்ளன.
எல்லை பகுதியில் உள்ள மக்களை முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், எல்லை பகுதிகளில் படைகள் குவிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. தாய்லாந்து மற்றும் கம்போடியா சுமார் 800 கிலோமீட்டருக்கு எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன.