“திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் பள்ளி முடித்து வீடு திரும்பிய 10 வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை ஆரம்பாக்கம் ரெயில் நிலையத்தில் வைத்தே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவன் என்றும், சம்பவத்தன்று அணிந்திருந்த அதே உடையுடன் கைது செய்யப்பட்டுள்ளான் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.”,