“தென்கிழக்கு ஈரானில் இன்று நீதிமன்றக் கட்டடத்தின் மீது மரம் நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் கையெறி குண்டு தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

மேலும், 20 பேர் காயமடைந்தனர்.தெற்கு மாகாணமான சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜாஹெதான் நகரில் உள்ள நீதிமன்ற கட்டடத்தில் இந்த தாக்குதல் நடந்தது.

பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் குற்றவாளிகளில் 3 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு “ஜெய்ஷ் அல்-அடல்” என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றுள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த மாகாணம் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைகளை ஒட்டியுள்ளது. இங்கு தீவிரவாதக் குழுக்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஈரானிய பாதுகாப்புப் படையினரிடையே அடிக்கடி மோதல்கள் நடைபெறுகின்றன. “,

Share.
Leave A Reply