யாழ்ப்பாணம், அரியாலை செம்மணி சிந்துப்பாத்தி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் 11 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 09 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும்  “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் போது, இன்றைய தினம் சனிக்கிழமை (26) அகழ்ந்து எடுக்கப்பட்ட 09 எலும்பு கூட்டு தொகுதியுடன் 90 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 101 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது  என்றார்.

இதேவேளை, இந்த அகழ்வு நடடிக்கைளில் 46 சாட்சிய ஆதாரப் பொருட்கள் இதுவரை அகழப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply