சேலம் அழகாபுரத்தை சேர்ந்தவர் சசிசேகர் (44), திருமணமாகி இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இவர் தருமபுரியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் இன்சூரன்ஸ் பிரிவில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இதற்கு முன்பு சேலத்தில் உள்ள மற்றொரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்தார்.
அப்போது அங்கு பணியாற்றிய திருமணமாகாத இளம்பெண் ஒருவருடன் சசிசேகர் பேசி பழகி வந்தார். இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது.
தொடர்ந்து அந்த பெண்ணுடன் சசிசேகர் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் அம்மாப்பேட்டையை சேர்ந்த ஒரு வாலிபருடன் அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்தது.
திருமணமான 10 நாளில் அந்த பெண் வாந்தி எடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த புதுமாப்பிள்ளை மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அந்த இளம்பெண் 2 மாதம் கர்ப்பிணியாக இருப்பதாக கூறினர்.
இதனை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த அந்த இளம்பெண்ணின் கணவர் திருமணமாகி 10 நாளில் எப்படி 2 மாதம் கர்ப்பம் என்று மனைவியிடம் கேட்டார்.
அப்போது கதறி அழுத அந்த இளம்பெண் என்னை மன்னித்து விடுங்கள் என கண்ணீர் விட்டு கதறினார்.
மேலும் தன்னுடன் வேலை பார்த்தவருடன் ஏற்பட்ட பழக்கம் குறித்த விவரத்தையும் கணவரிடம் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இதையடுத்து கருவை கலைத்து விட முடிவு செய்த புது மாப்பிள்ளை சசிசேகரை தேடி சென்றார்.
அவர் அப்போது தனது நண்பரான கோபால் என்பவரையும் உடன் அழைத்து சென்றார். சசிசேகரை பிடித்து எச்சரித்த 2 பேரும் கருவை கலைக்க ரூ.80 ஆயிரம் பணம் கேட்டனர்.
கொடுக்காவிட்டால் போலீசில் புகார் கொடுக்கப்போவதாகவும் கூறினர்.இதனால் பயந்து போன சசிசேகர் உடனடியாக கேட்ட பணத்தை கொடுத்து விட்டார்.
பணத்தை வாங்கிய புதுமாப்பிள்ளை மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். பின்னர் வேறு யாருக்கும் தெரியாமல் கருவை கலைத்தார்.
தொடர்ந்து புது மாப்பிள்ளை, மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்தார்.இதையடுத்து புதுமாப்பிள்ளையுடன் சென்ற கோபால் சசிசேகரை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டார்.
அதன்படி சேலத்தை சேர்ந்த பிரபல ரவுடிகளான மோகன் என்ற பாஸ்ட் புட் மோகன், உலகநாதன், பூமாலை ராஜன் ஆகிய 3 பேரை அழைத்து கொண்டு மீண்டும் சசி சேகரை கோபால் சந்தித்தார்.
அப்போது மேலும் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டினர். கேட்ட பணத்தை கொடுக்கவில்லை என்றால் அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிடுவோம் , பின்னர் நீ சிறைக்கு சென்று விடுவாய் என்று மிரட்டினர்.
இதனால் பயந்து போன சசிசேகர் ரூ.9 லட்சம் பணத்தை கொடுத்தார்.பணத்தை வாங்கிய கோபால் கும்பல் அவரிடம் தொடர்ந்து பணம் பறிக்க முடிவு செய்தனர்.
அதன்படி மேலும் ரூ.10 லட்சம் பணம் கொடுத்தால் இந்த பிரச்சனையை முடித்து விடலாம் இல்லை என்றால் சிக்கலில் இருந்து தப்பிக்கவே முடியாது என்று மிரட்டினர்.
இதனால் செய்வதறியாது திகைத்த சசிசேகர் ஏற்கனவே இந்த பிரச்சனைக்கு ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் கொடுத்த நிலையில் மேலும் ரூ.10 லட்சம் கொடுக்க முடியாது என்று கூறிய நிலையில் பயந்து போன அவர் போலீசில் புகார் கொடுக்க முடிவு செய்தார்.
அதன்படி அழகாபுரம் போலீசில் புகார் கொடுத்த அவர் இந்த பிரச்சனையில் இருந்து தன்னை காப்பாற்றுமாறு கதறினார்.
அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் அந்த பெண்ணின் கணவரின் நண்பரான கோபால் மற்றும் பிரபல ரவுடிகளான மோகன் என்ற பாஸ்ட் புட் மோகன், பூமாலை ராஜன், உலகநாதன் ஆகிய 4 பேர் மீதும் மிரட்டி ரூ.9 லட்சம் பணம் பறித்ததாக வழக்கு பதிவு செய்து அவர்களை தேடினர்.
அப்போது 4 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
வழக்கு பதிவு செய்யப்பட்ட கோபால் தவிர மற்ற 3 பேர் மீதும் சேலம் டவுன், அழகாபுரம் போலீஸ் நிலையங்களில் 5-க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.”,