ஒரு இளம் ஜோடி மோட்டார் சைக்கிளில் ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில், ஒரு பெண், இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் மீது, வாகன ஓட்டுநருக்கு எதிராக அமர்ந்து புறக்கணிக்க முடியாத ரீதியில் கட்டிப்பிடித்தபடி பயணிக்கிறார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீடியோவில் அவர்கள் சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்துவதும், பொதுமக்களின் பார்வையை அலட்சியப்படுத்துவதும் தெளிவாக காணப்படுகிறது.

இந்த காட்சிகள் பெருமளவிலான விமர்சனங்களை தூண்டியுள்ளன. சிலர் இதை ஆபாசமானதாக கூறி கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும், பாதுகாப்பு விதிகளை மீறி பொது சாலையில் இப்படியான செயலில் ஈடுபடுவது ஆபத்தானது எனவும், இது போல செயல்கள் விபத்துகளுக்கு காரணமாகலாம் என்றும் நெட்டிசன்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வீடியோவில் உள்ள பெண் தன்னுடைய முகத்தை மூடிக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply