“பதுமி:3-வது ‘பிடே’ பெண்கள் உலகக் கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடந்து வருகிறது.

இதன் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் கோனெரு ஹம்பி- திவ்யா தேஷ்முக் ஆகியோர் மோதினர்.

இதில் கிளாசிக்கல் அடிப்படையில் நடந்த முதல் ஆட்டம் டிரா ஆனது. இந்த நிலையில் கிளாசிக் முறையிலான 2-வது ஆட்டம் நேற்று நடந்தது. இதில் வெள்ளைநிற காய்களுடன் ஆடிய ஹம்பி 34-வது நகர்த்தலில் திவ்யாவுடன் ‘டிரா’ செய்தார்.

இதனால் இருவருக்கும் தலா ½ புள்ளி கிடைத்தது. இரண்டு ஆட்டங்கள் முடிவில் இருவரும் தலா ஒரு புள்ளியுடன் சமநிலை வகிப்பதால், வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

இதில் திவ்யா வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் பெண்கள் செஸ் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை திவ்யா படைத்துள்ளார்.

திவ்யாவை எதிர்த்து விளையாடிய கோனெரு ஹம்பி, 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.”,

Share.
Leave A Reply